இப்போன்னு இல்லை அப்போவே அவன் என்கிட்ட அதை தான் சொன்னான். உங்க கிட்ட அவன் பொய் சொல்லி இருக்கவாவது ஏதாவது காரணம் இருக்கலாம். ஆனால் என் கிட்ட அவன் இந்த விஷயத்தில் பொய் சொல்ல வேண்டிய அவசியமே இல்லையே...”
“அதுவும் சரி தான்...” என்றாள் பாரதி மனதின் குழப்பம் குரலிலும் எதிரொலிக்க!
ஒரு சில வினாடிகள் அவளை அமைதியாக பார்த்த லாவண்யா,
“என்ன விஷயம்னு முழுசா சொல்லுங்க பாரதி, என்னால முடிஞ்சா கட்டாயம் ஹெல்ப் செய்றேன்...” என்றாள்!
பவித்ரா பக்கம் மீண்டும் ஒரு பார்வை பார்த்து விட்டு, சுருக்கமாக, கடந்த சில நாட்களாக விவேக் நடந்துக் கொள்ளும் விதத்தையும் அதற்காக அவன் சொன்ன காரணத்தையும் சொன்னாள் பாரதி. விவேக்கை கெட்டவனாக காட்டாமல் மிகவும் மேலோட்டமாக தான் விஷயத்தை சொன்னாள்...
“அவர் சொன்ன ரீசன் உண்மையில்லை... அது எனக்கு நல்லாவே புரியுது ஆனால் உண்மையான ரீசன் என்னன்னு தான் தெரியலை லாவண்யா...”
“ஓ! நான் தான் அந்த காரணம்னு நினைச்சீங்களா பாரதி?”
கேள்வி கேட்ட லாவண்யாவின் முகத்தில் பெரிதாக மாற்றம் இல்லை என்றாலும், பாரதிக்கு கொஞ்சம் சஞ்சலமாக இருந்தது!
“சாரிங்க... லாவண்யா.... தப்பு தான்...”
“அச்சச்சோ!!!! வேண்டாம் பாரதி, திரும்ப ஃபர்ஸ்ட்ல இருந்து ஆரம்பிக்காதீங்க... என்னால புரிஞ்சுக்க முடியுது...”
“தேங்க்ஸ் லாவண்யா... அவருக்கு பிஸ்னஸ்ல ஏதாவது பிரச்சனையா? ஏதாவது நஷ்டம் அந்த