மாதிரி...”
“இல்லவே இல்லை... கற்பகம் ஆன்ட்டி கம்பெனி மட்டும் இல்லை அவனோட புது கம்பெனியிலும் எந்த பிரச்சனையும் இல்லை...”
“அப்போ வேற ஏதாவது பிரச்சனை?? அரசியல்வாதிங்க யாராவது????"
"ஹுஹும்..."
"ரவுடிங்க, தாதா மாதிரி எதாவது...???”
“ச்சேச்சே இல்லைங்க பாரதி... நீங்க தேவையே இல்லாமல் ரொம்ப யோசிக்குறீங்க...”
“வேற என்ன தான் காரணமா இருக்கும்? அவர் இது மாதிரி இருந்ததே இல்லைன்னு மதுவும் சொன்னா...”
“ம்ம்ம்...”
“ப்ளீஸ் லாவண்யா, நீங்க அவருடைய க்ளோஸ் ஃப்ரென்ட்... நீங்க அவர் கிட்ட பேசி பாருங்களேன்... உங்க கிட்ட உண்மையை சொன்னாலும் சொல்வார்...”
“அவன் கிட்ட நானும் பேசனும்னு தான் இருந்தேன் பாரதி... நீங்க என்கிட்டே சில விஷயம் சொல்லாம விட்டுட்டீங்க... ஆனால் பரவாயில்லை, ஆன்ட்டி சொன்னதை வச்சு என்னால உங்க வெர்ஷனில் இருக்க இடைவெளிகளை நிரப்ப முடியுது... என்ன பார்க்குறீங்க, நேத்து கற்பகம் ஆன்ட்டி என் கிட்ட பேசினாங்க... நீங்க சொல்லாம விட்ட நிறைய விஷயங்களை சொன்னாங்க... விவேக் உங்களை எல்லோர் முன்னாடியும் அறைஞ்சது அவங்களை ரொம்பவே பாதிச்சிருக்கு... ஒரு வேளை அவங்க தான் அதுக்கு காரணமோன்னு அவங்களுக்கு குற்ற உணர்வு வேற...”
“அப்படி இல்லை...”