(Reading time: 7 - 13 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

மிருதுளா கீதா பக்கம் பார்த்து விட்டு மறுப்பாக தலை ஆட்டினாள்!

   

கீதா மட்டும் என்ன சொல்லுவா, நான் சொன்னதை தான் சொல்லுவா... நீ முன்னாடி எல்லாம் அவக் கிட்ட சரியா பேசக் கூட மாட்டீயாம் தெரியுமா?”

  

நிஜமாவா அண்ணி?” கிருத்திகாவின் கேள்வியில் ஆச்சர்யம் நிறைந்து இருந்தது! ஹோட்டலில் சந்தித்த முதல் வினாடி முதலே கீதா அவள் மேல் அன்பை அருவியாக கொட்டிக் கொண்டிருந்தாள்! அவளிடம் ‘அந்த கிருத்திகா சரியாக பேசாமல் இருந்தாளா???

  

அது அப்படி இல்லை பிரின்சஸ்...” கீதா தயக்கத்துடன் பதில் சொன்னாள்...

  

சும்மா ஏன் பொய் சொல்ற கீதா, உண்மையை சொல்லு...” மிருதுளா கீதாவை ஊக்கினாள்!

  

கீதாவும் அதை ஏற்றுக் கொண்டவளாக கிருத்திகாவிடம் மென்மையாக பேசினாள்...

   

அது... வந்து... பிரின்சஸ்... எங்க கல்யாணத்துல தான் தியாகு உன்னை ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் பார்த்தான்... ஸோ, ஒரு விதத்துல பார்த்தா எங்க கல்யாணத்தினால தான் உங்க கல்யாணம் நடந்துச்சு... அதனால தானோ என்னவோ நீ எப்போவுமே என்னோட சரியா பேசினதே இல்லை...”

  

கிருத்திகாவிற்கு இந்த செய்தியும் ஆச்சர்யத்தை தான் கொடுத்தது!!!

   

அது ஏன் அண்ணி அப்படி?”

  

அது... உனக்கு உன் கரியர் (career) மேல ஆர்வம் அதிகம்... கொஞ்சம் வருஷம் கழிச்சு கல்யாணம் செய்துக்குறேன்னு சொல்லிட்டு இருந்த... மாமாக்கு எப்போவுமே தியாகுவை ரொம்ப பிடிக்கும்... அதனால அண்ணா ஃபேமிலில இருந்து உன்னை அண்ணாக்குன்னு பொண்ணு கேட்கவும், மாமா உடனே சரின்னு சொல்லிட்டாரு...”

  

“ஓ....!”

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.