தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 13 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
மிருதுளாவின் மனநிலை கிருத்திகாவிற்கு புரிந்தது! வெற்றி – மிருதுளா திருமணத்திற்கு பிறகு இப்போது தான் இருவரும் ஹோட்டல் தொடர்பான விஷயமாக அல்லாமல் வேறு காரணத்திற்காக வீட்டை விட்டு வெளியே வந்திருக்கிறார்கள். அதுவும் ஜோடியாக வந்திருக்கிறார்கள்! அவர்கள் சென்னை வந்திருப்பது கிருத்திகாவிற்காக என்றாலும், மிருதுளாவிற்கு ஸ்பெஷலானதாக தானே இருக்கும்!
மிருதுளாவை பார்த்து புரிந்துக் கொண்ட புன்னகை ஒன்றை கொடுத்து விட்டு, மீண்டும் தன் யோசனையில் ஆழ்ந்தாள் கிருத்திகா...
இந்த ராஜ் செய்வதை என்னவென்று சொல்வது?
யாரிடம் இருந்து தப்பித்து ஓடப் பார்க்கிறான் அவன்?
இன்று ஒரு நாள் பீச்சிற்கு வராவிட்டால் அவளிடம் இருந்து தப்பி விட முடியுமா என்ன?
இரண்டு நாட்களாக நடக்கும் நிகழ்வுகள் அவளின் வாழ்வை மட்டுமல்லாமல், அவளின் எண்ண ஓட்டத்தையும் மொத்தமாக மாற்றிப் போட்டிருந்தது!
யாரென்று தெரியாத ஒருவனை உன் கணவன் என்று யாராவது சொன்னால் அவளுக்குள் கலக்கம் தான் ஏற்பட்டிருக்க வேண்டும்! ஆனால், தலைகீழாக, அவளுக்கு ராஜ் மீது காதல் பொங்கி வழிந்து ‘ஓவர் ஃப்ளோ’ ஆகி கொண்டிருக்கிறது! அதுவும் அவன் அவள் பக்கத்தில் வந்தாலே தலை தெறித்து ஓடுகிறான்... ஆனாலும், அவளுக்கு அவன் மீது அன்பு... ஹுஹும் காதல்... அது தான் சரி...!!!
கிருத்திகாவின் முகத்தில் புன்னகை உதயமானது! அவளுடைய ஸ்டோன் ஸ்டேச்யூ மிஸ்டர் தியாகராஜனின் நினைவினால் வந்த புன்னகை!
அவளுக்கு பழைய சம்பவங்கள் பற்றி யோசித்து பார்க்கும் ஆர்வம் கூட பெரிதாக இல்லை... அவளுக்கும் ராஜுக்கும் நடுவே இருந்த உறவு பற்றி அனைத்தும் தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் மட்டுமே அதிகமாக இருந்தது!