அதிலும் குறிப்பாக, ராஜ் எதற்காக விவாகரத்து முடிவுக்கு வந்தான்...? என்ற ஒரே கேள்வியே அவளுக்குள் பெரிதாக இருந்தது...!!!
கூடவே கொசுறாக அவள் எப்படி வேரூர் போய் சேர்ந்தாள்... என்ற கேள்வியும் கூட இருந்தது...
திருமண போட்டோவில் அவ்வளவு சந்தோஷமாக இருந்த ராஜ், இப்போது ஏன் அவளுடன் பீச்சிற்கு வர வேண்டும் என்றால் கூட பயந்து ஓடுகிறான்...???
அவள் என்ன அவ்வளவு பெரிய பேயா, பிசாசா?
“அப்படி என்ன தான் செய்த நீ? உன் ஆளு ஏதோ பேயை பார்த்தது போலல அரண்டு ஓடுறாரு?”
திடீரென கேள்வி கேட்ட மிருதுளாவை ஒருவினாடி திகைத்து பார்த்த கிருத்திகா, மறுவினாடி பெரிதாக புன்னகைத்தாள்!
“சிரிக்காதே! உன் ஆளு மட்டும் வரலைனா பரவாயில்லை... இவரையும் கூடல கூட்டிட்டு போயிட்டாரு...” மிருதுளா காதில் புகை வர சொன்னாள்! மீண்டும் சிரித்தாள் கிருத்திகா!
“இது நல்ல நியாயமா இருக்கே! நீங்க அண்ணா கிட்ட போகாதீங்கன்னு சொல்ல வேண்டியது தானே? அண்ணாக்கு உங்களைப் பார்த்தால் பிசாசு போல தோணிச்சோ என்னவோ...”
“அடிப் பாவி, அவருக்காகன்னு வேலை மெனக்கெட்டு நான் மேக்கப் செஞ்சா நீ இப்படி சொல்ற?”
கிருத்திகா இப்போது தான் மிருதுளா சொன்ன ‘மேக்கப்பை’ கவனித்தாள்! மிருதுளா எப்போதும் அதிகமாக தன்னை அலங்கரித்துக் கொள்பவளில்லை! இப்போதும் கூட எக்ஸ்ட்ராவாக கண்ணுக்கு மை மட்டும் போட்டு இருந்தாள்... இது தான் அவள் ஊரில் ‘மேக்கப்பா’!!!! இந்த யோசனை எழுந்தாலும், மிருதுளாவின் சிம்பிளான அழகும் கிருத்திகாவின் கவனத்தில்