அப்பா சொல்ற மாதிரி குழந்தையே தான் நீ...!" என பொய்யாக விட்டுக் கொடுத்தாள் மிருதுளா!
கிருத்திகாவும், கீதாவும் பதில் சொல்லாமல் சிரித்தார்கள்.
🌼🌸❀✿🌷
பீச்சில் இருந்து வீட்டிற்கு திரும்பி செல்லும் போதும் காரில் பேச்சு சத்தம் இருந்தது... ஆனால் எல்லோரும் டையர்டாகி போயிருந்ததால், அதன் அளவு முன்பு இருந்ததற்கு குறைந்துப் போயிருந்தது! கீதாவும், மிருதுளாவும் பல வருடங்கள் பழகிய தோழிகள் போல இப்போதும் கதைப் பேசிக் கொண்டிருந்தார்கள்... கிருத்திகா அவர்களின் பேச்சில் கலந்துக் கொள்ளாமல், டையர்டாக இருப்பதாக காண்பித்துக் கொண்டு சீட்டில் தலை சாய்த்து அமர்ந்திருந்தாள்... ம்யூசிக் சிஸ்டமில் எஸ் பி பி’யின் இனியக் குரலில் ‘எல்லோரும் சொல்லும் பாட்டு’ பாடிக் கொண்டிருந்தது!
கிருத்திகா பீச்சில் இருந்தப் போது மனதில் அடக்கி வைத்திருந்த எண்ணங்களை இப்போது கட்டவிழ்த்து விட்டாள்... அவளுக்கும் ராஜிற்கும் நடுவே இருக்கும் விசித்திரமான உறவு அவளை குழப்பிக் கொண்டே இருந்தது... அவளின் குடும்பத்தை சந்தித்தது முதல் தெரிந்துக் கொண்ட விபரங்களை யோசித்துப் பார்த்தாள்...
கீதா, விஜய் கல்யாணத்தில் அவளை தியாகு பார்த்திருக்கிறான்! உடனே திருமண பேச்சும் ஆரம்பித்திருக்கிறது! அவளுடைய விருப்பத்திற்கு எதிராக திருமணமும் நடந்து இருக்கிறது! விஜயுடன் மிகவும் க்ளோஸ் உறவு வைத்திருப்பவளுக்கு, கீதாவுடன் பெரிய ஒட்டுதல் இல்லை.. அதே போல தான் தியாகுவிடமும்...
கிருத்திகாவிற்கு இப்போது அவளுக்கு நினைவில்லாமல் போயிருந்த அந்த ‘பழைய கிருத்திகாவின்’ மீது கோபமாக வந்தது...!
என்ன மாதிரியான பெண் அவள்...!
ராஜ் போன்ற கணவனுடன் சந்தோஷமாக வாழாமல்... சண்டை போட்டுக் கொண்டு வீட்டை