விட்டு கிளம்பி...
சரி கிளம்பியது தான் கிளம்பினாள், நேராக விஜயிடமோ அல்லாது அவளின் அம்மா வீட்டிற்கோ தானே போயிருக்க வேண்டும்...
ஏன் ஊரை விட்டுப் போனாள்?
யோசிக்கும் போதே, ராஜ் மீதிருக்கும் அதிகப்படியான பிரியத்தினால் அந்த ‘கிருத்திகாவை’ பற்றி பாரபட்சமாக யோசிக்கிறோமோ என்ற கேள்வியும் அவளுள் எழுந்தது...!
‘ஓல்ட் கிருத்திகா’ கணவனுடன் நல்ல விதமாக பேசி பழகாமல் இருந்திருக்கலாம், ஆனால் ராஜ் காட்டிய விவாகரத்து பத்திரத்தில் அவளின் கையெழுத்து இல்லையே...
ராஜ் சொன்னதை வைத்துப் பார்த்தால், அவன் தானே விவாகரத்தை விரும்பியதும்...
ஆனால் ஏன்...? ராஜ் எதற்கு விவாகரத்து கேட்க வேண்டும்??? அவன் தானே விரும்பி கல்யாணம் செய்துக் கொண்டான்???
மீண்டும் அவளுக்குள் அதே கேள்வி...!!!
கோவலன் காதை தன்னில் மாதவி வந்ததுண்டு,
மாதவி இல்லை என்றால் கண்ணகி ஏது இன்று?
காதில் விழுந்த எஸ் பி பி’யின் குரலில் ஒலித்த வாலியின் பாடல் வரிகள் சட்டென்று அவளுக்குள் புது எண்ணம் ஒன்றை வர வைத்தது...
அப்படியும் இருக்குமோ?
அவளுக்கும் ராஜிற்கும் நடுவே இன்னொருத்தியா????
நினைக்க கூட அவளுக்கு பிடிக்கவில்லை...!