ஒருவேளை இது உண்மை என்றால் ‘அந்த கிருத்திகா’விற்கும் இப்படி தானே இருந்திருக்கும்?
அதனால் தான் அவள் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு சென்றாளோ?
இப்போதும் ராஜ் அவளிடம் இருந்து தள்ளி தள்ளி போவதற்கும், விலகி இருக்க முயற்சிப்பதற்கும் இது தான் காரணமோ???
கிருத்திகாவிற்கு தலையை பிய்த்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது!!!
🌼🌸❀✿🌷
தியாகு கிருத்திகா இருந்த பக்கம் ரகசியமாக பார்த்தான்... அவன் பார்த்த நேரத்தில் கிருத்திகாவின் கண்களும் அவன் மீது தான் இருந்தது... அவன் பார்ப்பது தெரிந்த உடன், உடனடியாக வேறு எங்கோ பார்ப்பது போல் முகத்தை திருப்பிக் கொண்டாள் அவள்!
மனதில் இருந்த அத்தனை அழுத்தத்தையும் மீறி அவளின் அந்த குழந்தைத்தனமான செயல், அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது!
அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்க கஷ்டப் பட்டவனின் கண்கள் என்னவோ மனைவி மீது தான் அலை பாய்ந்துக் கொண்டே இருந்தது! கிருத்திகாவின் கண்களில் இருந்த யோசனை அவனின் கண்களை தப்பவில்லை...
இப்போது அவனின் அழகிய மனைவியின் மனதில் புதிதாக என்ன யோசனை வந்திருக்க கூடும் என்று யோசித்தான்...
எப்போதுமே கிருத்திகா புத்திசாலி தான்...!
அழகும் அறிவும் ஒரே இடத்தில இருப்பது வெகு வெகு அரிது! அவன் மனைவியிடம் இரண்டுமே தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது...!