இருக்கவும்,
“பாரு, லாவண்யா சொன்னது மாதிரி எதையாவது மனசுல வச்சு யோசிச்சிட்டு இருக்காதே... அவங்க தான் விவேக் கிட்ட பேசுறேன்னு சொல்லி இருக்காங்களே...” என்று சொல்லி தோழியை உற்சாகப் படுத்த முயன்றாள் பவித்ரா.
“இல்ல பவி, நான் யோசிக்குறது வேற விஷயம்... நீ அவரோட ஹெல்த் பத்தி சொன்னப்போ தான் எனக்கு ஞாபகம் வந்தது... அவரும் நானும் அவருடைய தலைவலிக்காக இரண்டு மூணு மாசம் முன்னாடி ஹாஸ்பிட்டல் போனோம்... அந்த ரிசல்ட் வாங்க மறந்துட்டேன்...”
“பாரு, அது தான் இரண்டு மாசமா விவேக் பத்தி என்னன்னு புரியாம நீ குழம்பிட்டு இருக்கீயே, அதுல இந்த ரிப்போர்ட் விஷயம் மறந்து போறது எல்லாம் இயற்கை தானே...”
“ப்ச்... தெரியலை பவி! சரி, அந்த ஹாஸ்பிட்டல் போகனும், இன்னைக்கு ரொம்ப லேட் ஆயிடுச்சே, நாளைக்கு போகலாமா?”
“சரி, போகலாமே...”
“சாரி பவி, உன்னையும் ரொம்ப டிஸ்டர்ப் செய்றேன்... எனக்கே தெரியுது... லீவ் டைம்ல கூட உன்னை நித்திலா கூட டைம் ஸ்பென்ட் செய்ய விடாம தொல்லை செஞ்சுட்டு இருக்கேன்... எனக்கே புரியுது சாரி...”
“தேங்க்ஸ் போய் இன்னைக்கு உனக்கு சாரி-மேனியாவா??? சரி, நீ நிஜமாவே ஃபீல் செஞ்சு தானே சாரி சொல்ற?”
“இதுல என்ன உனக்கு சந்தேகம்?”
“அப்போ எனக்கு ஒரு ஹெல்ப் செய்...”
“என்ன ஹெல்ப்?”