“என்னுடைய தீஸிஸ்க்கு ஹெல்ப் செய்...”
“ஹேய்...”
“நான் விளையாட்டுக்கு சொல்லலை பாரு, நிஜமாவே தான் சொல்றேன்...”
“அது சரி...!!! லெக்சரர் மேடமே இப்படி தீஸிஸ் வேற ஒருத்தரை வச்சு ரெடி செஞ்சா, அப்புறம் பசங்களை என்னன்னு சொல்றது? இதுல உனக்கு ரொம்ப ஸ்ட்ரிக்ட்டான லெக்சரர்ன்னு இமேஜ் வேற!”
“ஹி ஹி ஹி...!!! ஹெல்ப் கேட்டா இப்படி சொல்லு... ஆனால் சாரி, தேங்க்ஸ் மட்டும் வள்ளல் போல வாரி வழங்கு...!”
பாரதியின் கவனத்தை ஒரு வழியாக திசை திருப்பிய பவித்ரா, அதற்கு மேல் அவளை அதிகம் யோசிக்க விடாது, வேறு விஷயங்கள் பேசியப்படியே வந்தாள்.
இருவரும் வீட்டிற்கு வந்து சேர்ந்ததும், செல்லம் கொஞ்சிய மகளுடன் ஒரு சில நிமிடங்கள் செலவு செய்து விட்டு மற்ற வேலைகளை கவனிக்க சென்றாள் பவித்ரா. கமலாவிடம் பொதுவாக பேசிக் கொண்டிருந்த பாரதி, மேஜை மீது வைக்கப் பட்டிருந்த அன்றைய தபால்களை கவனித்தாள்.
“பவி, இரண்டு லெட்டர் வந்திருக்கு போல இருக்கு, எடுத்துட்டு வரவா?”
“எடுத்துட்டு கிச்சனுக்கு வா பாரு... யார் கிட்ட இருந்து வந்திருக்கு?”
“ஒன்னு எல்.ஐ.ஸி...”
“ஓகே, அதை அந்த மஞ்சள் பேக்ல போடு...”
ரமேஷுக்கு வேலையை ஈஸி ஆக்க ஒவ்வொரு கடிதத்தையும் இப்படி பிரித்து ஒவ்வொரு நிற