(Reading time: 6 - 11 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

பிளாஸ்டிக் பைகளில் போட்டு வைப்பது பவித்ராவின் பழக்கம். ரமேஷ் கடிதத்தை படித்ததற்குப் பிறகு, ஏதாவது செய்ய வேண்டிய வேலை இருந்தால் அதற்காக ஒரு பை, வெறும் தகவல் அறிந்துக் கொள்ளும் வகையில் இருப்பவற்றுக்கு வேறொரு பை, முக்கியமான தகவல்கள் இல்லாதவற்றுக்கு மூன்றாவதாக ஒன்று... அதை படித்துவிட்டு பத்திரப் படுத்துவதோ, தூக்கி எரிவதோ ரமேஷின் வேலை!

  

இது ஏதோ பாங்க்ல இருந்து வந்திருக்கு பவி...”

  

பாரதியிடம் இருந்த லெட்டரை கையில் வாங்கி பிரித்துப் பார்த்த பவித்ரா,

  

இதை அந்த ரெட் பேக்ல போடு...” என்றாள்.

  

பாங்க்ல இருந்து வந்திருக்கே பவி, முக்கியமான லெட்டர் இல்லையா?”

  

ப்ச்... நீயே படிச்சுப் பாரு...”

  

தோழியின் சலிப்பை உணர்ந்துக் கொண்டு மேலும் தோண்டி துறுவாமல் அந்த கடிதத்தை திறந்து மேலோட்டமாக பார்த்தாள் பாரதி! அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் பவித்ரா சொன்னது போலவே அங்கே இருந்த சிவப்பு பையினுள் அந்த லெட்டரை போட்டு வைத்தாள்!

  

🌼🌸❀✿🌷

   

பாரதியும், பவித்ராவும் தன் ஆஃபீஸ் ரூமில் இருந்து கிளம்பி சென்ற உடனேயே விவேக்கை அவனின் செல்ஃபோனில் தொடர்புக் கொள்ள முயன்றாள் லாவண்யா. அந்த பக்கம் ரிங் போனதே தவிர எடுக்கப் படவில்லை. இவனுக்கு என்ன தான் ஆனது என்று எண்ணியப்படி லதாவை அழைத்தாள் லாவண்யா.

  

லதா, விவேக் இப்போ ஆஃபிஸ்ல இருப்பானா?”

  

ஆமாம் மேடம், இப்போ எல்லாம் ரொம்ப லேட்டா தான் விவேக் சார் வீட்டுக்கு போறார்...” என்றாள் லதா!

5 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.