(Reading time: 16 - 31 minutes)
Chinna marumagal
Chinna marumagal

”ஜானகி கல்யாணத்துக்கு வேங்கையனும் வருவார்ல” என கேட்க மஹதியோ பதில் சொல்லவில்லை மகேந்திரனோ

  

”அதெப்படி வேங்கையன் இல்லாம இருப்பாப்பலயா கண்டிப்பா இருப்பாரு” என சொல்ல மஹதியோ ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கைப் பார்த்தாள், அதோடு பேச்சு நின்றது. பயணம் அமைதியாக தொடர்ந்தது

  

காரைக்குடி வருவதற்குள் நடுநிசியாகிவிட குபேரன் வீட்டில் இறங்கினார்கள்.

  

அந்நேரம் கூட வீடு களைகட்டியது, கல்யாண வீடு என்பதால் சொந்தக்காரர்களுக்கு பஞ்சமில்லை, மஹதிக்கும் அவளது பெற்றோருக்கும் ஒரு அறையை தந்தார் வேணி, அதில் அவர்கள் உறங்கினார்கள்.

  

விடிந்ததும் கல்யாண வேலைகள் மடமடவென தொடங்கியது. மஹதியும் நேரத்தோடு எழுந்து குளித்து ரெடியாகி வந்தாள், தன்னால் முடிந்த வேலைகளை செய்தாள், வேணிக்கு துணையாக நின்றாள். ஜானகியோ அழகாக தன்னை அலங்காரம் செய்ய சொல்ல அவளுக்கு மஹதியே அழகாக அலங்காரம் செய்தாள், சரியான நேரம் வரும் போது அனைவருமே கிளம்பினார்கள்

  

கோயிலில் திருமணம் என்பதால் அனைவருமே அங்கு கூடினார்கள். மணமகன் வீட்டினரும் வந்தார்கள். மருமகள் வந்ததும் அடுத்தடுத்த சடங்கு சம்பிரதாயங்கள் நடக்கத் தொடங்க மஹதி மட்டும் வேங்கையனை தேடலானாள், எங்குமே அவன் இல்லை அவளுக்கு அங்கு இருக்கவே இருப்புக் கொள்ளவில்லை, வந்திருந்த அனைவரிடமும் வேங்கையன் பற்றி விசாரித்தாள், யாருக்குமே எதுவும் தெரியவில்லை, வீரசிங்கம் மங்களம் என யாரும் இல்லாமல் போக குழம்பினாள்.

  

ஜானகி மூர்த்தி திருமணம் ஊர் அறிய தடல்புடலாக நடந்து முடிந்தது, முதல் ஆளாக மஹதி ஜானகியிடம் வந்து கிப்ட் தந்தாள்

  

”என்னடி அவசரம் இருடி“

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.