”சரிம்மா போலாம்” என சொல்ல அவரும் கிளம்பினார்
மண்டபத்தை விட்டு முதலில் பஸ்ஸில் வேங்கையன் தன்னுடன் வந்த ஆட்களையும் ஜானகி மற்றும் மூர்த்தியையும் அழைத்துக் கொண்டு காரைக்குடி நோக்கி கனத்த மனதுடன் சென்றான்.
அடுத்து மஹதியை அழைத்துக் கொண்டு மகேந்திரன் தன் மனைவியுடன் வீடு திரும்பினார். நடந்ததில் அவருக்கு பெரிதாக துக்கமே இல்லை, கலகலவென இருந்தார், சாந்தி கூட சந்தோஷமாக இருந்தார்
”உங்களுக்கு கஷ்டமாயில்லையா” என மஹதி கேட்க
”எதுக்கு கஷ்டப்படனும் இந்த கல்யாணம் நிக்கனும்னு நாங்க ஆசைப்பட்டோம் அது நடந்துடுச்சி”
”ஆனா எனக்கு கஷ்டமாயிருக்கு”
”முதல்ல இந்த ஈகோவை விட்டுத்தள்ளு பார்த்தல்ல வேங்கையனை சட்டுன்னு உனக்காக இறங்கி வந்தான் ஆனா நீ அவனை விட்டுப் பிரிஞ்சி வர்ற”
”அதுக்காக அவன் என்ன எனக்காகவா வந்தான் பாஸ்கரன் போனதால வந்தான்“
”இல்லைம்மா ஆரம்பத்தில உனக்கும் பாஸ்கரனுக்கும் கல்யாணம்னு சொன்னதும் வேங்கையனே தேடிப் போய் பாஸ்கரன்கிட்ட பேசி நம்ம வீட்டுக்கு வந்தான்”
”என்னப்பா சொல்றீங்க“
”ஆமாம் இங்க வந்து கல்யாண வேலைகளை இழுத்துப் போட்டுக்கிட்டு செய்தான், உனக்கு அவன் செய்த துரோகத்துக்கு பிராயசித்தமா தன்னை கஷ்டப்படுத்திக்கிட்டு உனக்காக அவ்வளவும் செய்தான்”