மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 05 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
வினாயக்கும், சக்தியும் அவர்களை தாண்டி சென்ற காரை பற்றிய கவலை இல்லாமல் பேச்சை தொடர்ந்தார்கள்!
“நீங்க சொல்ற மாதிரி யோசிச்சா யூஸ்ஃபுலா இருக்கும்னு தோணுது வினாயக்.”
“எனக்கு ரொம்ப தெரிஞ்சவங்க ஒருத்தங்க சக்தி மேம். வயசானவங்க. தனியா இருந்தாங்க. பசங்க வெளிநாட்டுல இருந்தாங்க. ரொம்ப நாளா அவங்க ஃபோனை எடுக்கலைன்னு அவங்க மக போலீஸ்க்கு ஃபோன் செய்து சொல்லி செக் செய்தா, யாரோ அவங்களை கத்தியால குத்திட்டு வீட்டுல இருந்ததை திருடிட்டு போயிருக்குறது தெரிய வந்துச்சு. அது நடந்து நாலு நாளுக்கு மேல ஆகி இருக்கும்னு பேசிக் கிட்டாங்க!
இன்னைக்கு காலக்கட்டத்துல எல்லோரும் ஒரே இடத்துல இருங்கன்னு சொல்ல முடியாது. வேலை கிடைக்குறதே கஷ்டம், அது நமக்கு பிடிச்ச இடத்துல தான் அமையும்னும் சொல்ல முடியாது. அப்போ இவங்களை போல தனியா இருக்க வேண்டிய சூழ்நிலைல இருக்குறவங்க நிலைமை என்ன? அவங்களுக்கு ஏதோ நடந்திருக்குன்னு தெரிஞ்சுக்கவே நாள் கணக்காச்சு!
அந்த இன்சிடன்ட் தான் இந்த ஜூப்பிட்டர் பின்னால இருக்க மோட்டிவேஷன். நல்ல ஸ்பான்சர் கிடைச்சா குறைவான விலைக்கு விக்கலாம். எப்படி மொபைல் ஃபோன் நம்ம எல்லோருக்கும் பழகிருச்சோ, அதே மாதிரி இதையும் பழக்கப் படுத்திடலாம்!”
“ரொம்ப அதிகமா இப்படி ரோபோ, மொபைல்ன்னு நம்பிக்கை வைக்குறதும் சரி இல்லைன்னு எனக்கு தோணுது. இந்த உங்க எலக்ட்ரானிக் நாய்ல ஏதாவது சரியா வேலை செய்யாம போனா என்ன ஆகும்? எப்படி தெரியும்?”
“உங்க டைரக்ட் ஃபீட்பேக்குக்கு நன்றி சக்தி மேம். இதைப் பத்தி நானும் யோசிக்குறேன்.”
சக்தியின் மொபைல் ரிங் ஆனது. சக்தி ஃபோனின் டிஸ்ப்ளேவை பார்த்தாள்! அவள் தோழி சத்யா அவளை அழைத்துக் கொண்டிருந்தாள்.
“இம்பார்டன்ட் கால் வினாயக். நான் பேசி ஆகனும். நைஸ் மீட்டிங் யூ. உங்க நாய் குட்டி ப்ராஜக்ட் சக்சஸ் ஆக என் வாழ்த்துக்கள்!”