”நின்னு என்ன செய்யப் போற அவரை வெறுப்பேத்தப்போறியா இல்லை கஷ்டப்படுத்தப் போறியா”
”என்னவோ செய்றேன் உனக்கென்ன அவர் எங்க சொல்லு”
”ஓ அப்படியா அப்ப சரி நீயே பார்த்துக்க” என சொல்லி சட்டென அவளை திருப்பி நிற்க வைத்தாள்.
அவளோ அதிர்ந்து என்னவென பார்க்க அவளுக்கு பக்கத்தில் இதுவரை நின்றிருந்தது வேங்கையன்தான், பாஸ்கரன் எங்குமே இல்லை, மஹதி அதை நம்ப மறுத்தாள், சுற்றி முற்றி பாஸ்கரனை தேட ஜானகியோ அவளிடம்
”யாரைடி தேடற அதான் நீ கேட்ட ஆளு இங்க இருக்காப்லயே அப்புறம் என்ன“
”பாஸ்கரன் எங்க” என கேட்க
”அவரா அவரு” என இழுக்க
”சொல்லு ஜானு” என சொல்ல அவளோ சட்டென ஒரு மொய்கவரை அவளிடம் நீட்டி
”இந்தா மொய்கவரு, இதை உன்கிட்ட கொடுத்துட்டு அப்பவே சாப்பிட்டு வீட்டுக்கு போயிருப்பார்ன்னு நினைக்கிறேன், நாளைக்கு கல்யாணத்துக்கு அவரால வரமுடியாதாம் சாரி சொல்ல சொன்னாரு, லண்டன் போறாராம் ஏதோ அவசர வேலையாம்“
”என்னடி விளையாடறியா இங்க என்னதான் நடக்குது” என கேட்க ஜானகியோ
”அதை ஏன் என்கிட்ட கேட்கற”
”வேற யாரை கேட்கறது” என சொல்ல ஜானகியோ