”அம்மா போதும் விடிஞ்சா எனக்கு கல்யாணம், இப்ப போய் தேவையில்லாம பேசாத, மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்களான்னு போய் பாரு போ” என விரட்ட சாந்திக்கு வெறுப்பே வந்தது, அவர் கிளம்பிச் செல்ல மஹதி ஜானகியைப் பார்த்தாள்
”உனக்கு வேற வேலையே இல்லையா எதையாவது போய் பாரேன்”
”அதான் உன் நடிப்பை பார்க்கிறேனே போதாதா”
”ப்ச் வேணாம் அப்படி பேசாத”
”போடி நல்லா நடிக்க கத்துக்கிட்ட உனக்கு அவார்டே தரலாம்“
”இது ஒண்ணும் நடிப்பு இல்லை நிஜம்”
”நான் என்ன குழந்தையா எனக்குத் தெரியாது எது நிஜம் எது நடிப்புன்னு, இதுநாள் வரை நிஜத்தில இருந்த நீ வேங்கையன் உன்னை திட்டவும் நடிக்க ஆரம்பிச்சிட்டியா, இப்படியே எத்தனை நாள் நடிப்ப கல்யாணம் வரைக்குமா இல்லை அதுக்கு அப்புறம் கூட பாஸ்கரன் கிட்டயும் நடிப்பியா, உனக்கென்னடி நீ நடிச்சாலும் அது நிஜம்போலதான் இருக்கும்”
”வேணாம் ஜானு எனக்கு கோபம் வருது”
”ஓ கோபம் வருதா அப்ப ரோஷம் இருக்கா உனக்கு பரவாயில்லையே“
”நிறுத்து ஜானு” என்றாள் கோபமாக
”நீ நிறுத்து முதல்ல, இப்படி நடிக்காத பார்க்க கஷ்டமாயிருக்கு, கல்யாணம் ஆன பின்னாடி பாஸ்கரனை பத்தி கொஞ்சமாவது நினைச்சிப்பாரு, ஒரு காலத்தில நான் எப்படி வேங்கையனை கல்யாணம் செய்துக்கிட்டு வாழ்ந்தேனோ அதை விட மோசமான நரகமாயிருக்கும் உன் வாழ்க்கை, என்னை போல நீயும் வேங்கையன் போல அந்த