(Reading time: 8 - 15 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

இந்துவிற்கு பெரியவர்கள் தங்களுக்குள் செய்துக் கொண்ட அரேன்ஜ்மென்ட்டில் முழு சம்மதம் இல்லை. ஆனாலும் காஞ்சனா என்பதால் மேலே கேள்விகள் கேட்காமல் அமைதியாக இருந்தாள்.

  

டாக்டரிடம் பேசி விட்டு வந்த சேகர், மறுநாள் அர்ச்சனாவை டிஸ்சார்ஜ் செய்து விடலாம் என்று சொல்லவும் அனைவருக்கும் சந்தோஷமாக இருந்தது.

  

அன்று நடக்க வேண்டியவற்றை வேகமாக திட்டமிட்டாள் லக்ஷ்மி.

  

“சரி, அப்போ நானும் காஞ்சனாவும் இன்னைக்கு நைட் ஹாஸ்பிட்டல்ல தங்குறோம்... நீங்க எல்லோரும் கிளம்புங்க... வீணா, நீ வேணா ரோஷினியை கூட்டிட்டு இந்து வீட்டில தங்குறதா இருந்தா தங்கு... இந்துக்கும் உதவியா இருக்கும்...”

  

“இல்லை ஆன்ட்டி, பரவாயில்லை... வீட்டுல கனகா என் துணைக்கு இருப்பாங்க...” என்றாள் இந்து.

  

“கனகா இருக்கட்டும் இந்து... வீணாவும் கூட இருந்தா நல்லது... கீதாவை அப்படி வந்து தங்க சொன்னா ராஜீவ் உதைப்பான்... அதனால வீணா தான் சரி...” என்றாள் லக்ஷ்மி.

  

அவளின் கேலியில் எல்லோர் முகத்திலும் புன்னகை தோன்றியது.

  

“சரி இந்து, அப்போ நீ கிளம்பு... நான் வீட்டுக்குப் போய் அவினாஷ் கிட்ட சொல்லிட்டு, ரோஷினியோட உங்க வீட்டுக்கு வந்துறேன்...” என்றாள் வீணா!

  

“இல்லை வீணா, நானும் உன்னோடவே வரேன்... கனகா ஜெயா அண்ணாவோட காருல காலையிலே கிடைக்காத அந்த மருந்து வாங்க அடையார் போயிருக்கா...” என்றாள் இந்து.

  

“அடடா... நீ ஏன் இந்து வேஸ்ட்டா அலையுற? வீணா போயிட்டு வரட்டும்... நீ சஞ்சீவோட உங்க வீட்டுக்கு போ... நான் ராஜீவை என்னை பிக் அப் பண்ண சொல்றேன்... ஏற்கனவே ரொம்ப டையர்டா தெரியுற, இதுல எதுக்கு இந்த எக்ஸ்ட்ரா அலைச்சல் எல்லாம்...”

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.