இன்னிக்கு நீயா நானான்னு பார்க்கிறேன், இன்னிக்கு நீ என் கையால சாகப் போற, நீ செத்தாதான் எங்களுக்கு விடிவு காலம் வரும் வாய்யா” என ஈஸ்வரன் கத்த கூடவே அவனுடன் வந்தவர்களும் வானை பிளக்கும் வண்ணம் கூச்சலிட அவை அனைத்தும் கேட்டுக் கொண்டு வீட்டிற்குள் அமர்ந்திருந்த ஆவுடையப்பனிடம் வந்தாள் ஆண்டாள்
”அப்பா என்னப்பா உங்களை பத்தி இப்படி பேசறாங்க, நீங்க அமைதியா உட்கார்ந்து செய்தித்தாள் வாசிக்கறீங்க, உங்களுக்கு கோபம் வரலையாப்பா”
”ஆண்டாளு குரைக்கிற நாய் என்னிக்குமே கடிக்காதும்மா, இவனுங்கெ எல்லாம் குறைக்கதான் லாய்க்கு, கொஞ்சநேரம் திமிறிக்கிட்டு இருப்பானுங்க அப்புறம் கிளம்பி போயிடுவானுங்க, நீ இதையெல்லாம் பார்க்க கூடாது போ போய் உன் அறையில இரும்மா”
”அப்பா நான் ஒண்ணு சொல்றேன் செய்வீங்களா”
”சொல்லு என் தங்கம், நீ சொல்லி நான் கேட்காம இருப்பேனா”
”அப்பா நமக்கென்ன குறைச்சல் நாம நல்லாதானே இருக்கோம், இன்னும் ஏன் மக்களை அடிமையாக்கி வைச்சிருக்கனும் வேணாம் அவங்களை விட்டுடலாம்பா”
”அப்படி சொல்லக்கூடாது ஆண்டாளு, நாம ஆள்ற வம்சத்தைச் சேர்ந்தவங்க, நாம ஆளனும் அவங்க நமக்கு அடிமையா இருக்கனும்ங்கறது விதி, பரம்பரை பரம்பரையா காப்பாத்திக்கிட்டு வர்ற பழக்கத்தை மாத்த கூடாதும்மா அது பெரிய தப்பாயிடும்”
”ஆனா பாவம்பா மக்கள், அவங்களும் மனுஷங்கதானே அவங்களுக்கும் விருப்பு வெறுப்பு இருக்குல்ல”
”இருந்து என்ன பிரயோசனம் ஆண்டாளு நாம இல்லைன்னா அவங்க ஒண்ணுமில்லை, நாம அவங்களை அடிமைப்படுத்தலை அவங்களை பாதுக்காக்கிறோம்“
”புரியலைப்பா”