என்னாச்சின்னு தெரியலை எனக்கே எதிரா நிக்கறாங்க”
”ஓஹோ உங்க சொந்தம்னதும் கொல்ல மனசுவரலை, அதே என் அம்மான்னா கொல்வீங்க அப்படித்தானே“
”டேய் நிறுத்துடா சும்மா பழைய கதையையே பேசிக்கிட்டு, இத்தனையும் செய்தது எதுக்காக? நமக்காக உனக்காகத்தான் அதை நீ புரிஞ்சிக்காம பேசற”
”போதும் இனி நான் உங்களோட சேர்றதா இல்லை இந்த சொத்து கூட எனக்கு வேணாம், நான் போறேன் இங்கிருக்க மாட்டேன்”
”எங்கடா போவ எங்க போவ உனக்கு போக்கிடம் எங்கிருக்கு, என்னை விட்டா உனக்கு நாதியில்லை பேசாம இங்கயே ஒரு மூலையில கிட”
”முடியாதுப்பா”
”வேணாம்டா என் கையால உன்னை கொல்ல வைச்சிடாத”
”கொல்லுங்கப்பா கொல்லுங்க நான் செய்த பாவத்துக்கு உங்க கையாலயே செத்து ஒழியறேன்“
”அவசரப்படாத சமயம் வரும் போது உன்னை கொல்றேன், என்னை நீ மாட்டிவிடற நாள் வரும்ல அப்ப உன்னை பார்த்துக்கிறேன், அதுவரைக்கும் உயிரோட இந்த அறைக்குள்ளயே இரு, வேளா வேளாக்கு உனக்கு வேண்டிய சாப்பாடு வந்து சேரும், 3 வேளையும் சாப்பிட்டு ஓய்வெடு, தேவையில்லாம குற்ற உணர்ச்சியில புலம்பிக்கிட்டு திரியாத, அந்த நாச்சியா கண்கொத்தி பாம்பா நம்மளையே சுத்திக்கிட்டு இருக்கா நீ புலம்பறதை அவள் கேட்டா போதும் நம்ம கதை முடிஞ்சிடும் ஊரையே கூட்டிடுவா அப்புறம் ஊர் கிட்ட நாம கல்லடிபட்டுதான் சாகனும்“
”அப்படி ஒரு சாவு வந்தாலும் சரி சந்தோஷமா நான் ஏத்துக்குவேன்”
“அட என்னடா இவன், விரக்தியா பேசிக்கிட்டு இருக்கான், நானே உயில் பத்திரம்