”என்னது கீழவீதியா என்னப்பா சொல்றீங்க“
”ஆமாம்டா நான் கீழவீதியை சேர்ந்தவன்தான்”
”அப்புறம் எப்படி ஆண்டாள் அம்மாவை கல்யாணம் செய்துக்கிட்டீங்க“
”அது ஒரு பெரிய கதை, இப்ப அதை பத்தி சொல்றதால ஒரு பிரயோசனமும் இல்லை”
”அப்பா சொல்லுங்கப்பா நான் எல்லாத்தையும் தெரிஞ்சிக்கனும் சொல்லுங்கப்பா”
”இப்ப நீ தெரிஞ்சிக்கிட்டு என்ன செய்யப் போற”
”சொல்லப்போறீங்களா இல்லை நான் அந்த நாச்சியாகிட்ட கேட்டு தெரிஞ்சிக்கவா“
”அவளுக்கு என்னடா தெரியும், ஏதோ சில விசயங்களை யார் மூலமாவோ தெரிஞ்சி வைச்சிக்கிட்டு நம்மளை மிரட்டறா அவ்ளோதான், ஒரு சரியான சந்தர்ப்பம் வரட்டும் அவள் கதையை முடிக்கிறேன், அதுவரைக்கும் அமைதியா இருடா, நானே அந்த உயில் பத்திரத்தை எங்க வைச்சேன்னு தெரியாம தேடிக்கிட்டு இருக்கேன் நீ வேற”
”உயிலா யார் எழுதினது”
“ஆண்டாள் எழுதின உயில் பத்திரம்“
”அப்ப அந்த உயில்ங்கறது உண்மையா, அப்படி ஒண்ணு இருக்கா”
”இருந்தது ஆனா இப்ப அது எங்கன்னுதான் தெரியலை”
”உயில்ல என்ன எழுதியிருந்தாங்கப்பா”