முல்லு செய்தேன், எத்தனை பேரை ஏமாத்தினேன், எத்தனை பேரை கொன்னேன், எத்தனை பாவங்களை சுமந்தேன், அதெல்லாம் எதுக்கு இந்த சொத்துக்களை அனுபவிக்கனும், கீழவீதிக்காரங்களை மதிக்காத மக்களை ஆளனும்னுதான், என்னால மறுபடியும் அந்த நரகத்துக்கு வரமுடியாது, வரவும் மாட்டேன்”
”அப்ப நான் போறேன்“
”உன்னை நான் விடறதாயில்லை, நீ இங்கதான் இருக்கனும் நீ வெளிய போய் உண்மையை சொன்னா மாட்டப்போறது நான் மட்டுமில்லை நீயும்தான், நானாவது வாழ்ந்து முடிச்சிட்டேன் ஆனா, நீ இன்னும் வாழனும் உன் பையன் அகத்தியன் வேற இருக்கான் மறந்துடாத”
”அகத்தியன் ஒண்ணும் என் புள்ளை கிடையாது, அவசர ஆத்திரத்துக்கு அவனை தூக்கிட்டு வந்தீங்க, உண்மையை சொல்லுங்கப்பா நாச்சியாதானே என் புள்ளை”
”என்னடா பெத்த பாசமா, அந்த நாச்சியாவை குழந்தையா இருக்கறப்பவே கொன்னிருக்கனும், ஆண்டாள் குறுக்க நின்னா குழந்தைக்கு பதிலா அவளை கொல்ல வேண்டியதா போச்சி இல்லைன்னா அந்த நாச்சியாவை கொன்னிருந்தா இந்நேரம் அவள் வளர்ந்து இங்க வந்து நம்ம தலைமேல ஏறி நின்னு ஆடிக்கிட்டு இருக்க மாட்டா, பரவாயில்லை இப்பவும் நேரமிருக்கு, அவளையும் கொன்னு அதே மரத்துக்கு அடியில புதைச்சிட்டா யாருக்கும் சந்தேகம் வராது, அகத்தியன் கேட்டா கூட அவள் பயந்து போய் ஓடிட்டதா சொல்லிடலாம், அவளோட அப்பா அம்மாவையும் பயமுறுத்தி எங்கயாவது விரட்டிடனும் இல்லைன்னா அகத்தியன் என் புள்ளைன்னு சொந்தம் கொண்டாட ஆரம்பிப்பாங்க“
”ஏன்பா அவங்களையும் கொன்னுட வேண்டியதுதானே”
”கொன்னிருப்பேன் ஆனா“
”என்ன ஆனா”
”என் சொந்தம்னு இருக்கறது அவங்கதான், அதனால பார்க்கிறேன், அவங்களும் என்னை புரிஞ்சிக்கிட்டு நான் சொல்றதை கேட்டு இத்தனை வருஷமும் நடந்தாங்க ஆனா, இப்ப