“என்னது???”
“யாருக்கு????”
கீதாவும், விஜயும் கிருத்திகா சொன்னதை நம்ப முடியாமல் வாயைப் பிளந்தார்கள்!
“வேற யாருக்கு எல்லாம் ராஜ்க்கு தான்...”
விஜயின் முகத்தில் இருந்த அதிர்ச்சி காணாமல் போய் சிரிப்பு தோன்றியது!
“ஹா ஹா ஹா! நல்ல ஜோக் பிரின்சஸ்... ஹா ஹா ஹா!!!“
கிருத்திகா வாய் விட்டு சிரித்த விஜய்யை பார்த்து கோபம் பொங்க முறைத்தாள்!
கீதா அவளின் மனநிலை புரிந்தவளாக மீண்டும் கணவனை அடக்கினாள்!
“நீங்க வாயை மூடிட்டு சும்மா இருங்க!”
விஜய் சிரிப்பதை நிறுத்தினான். ஆனாலும் அவனின் முகத்தில் சற்று முன் இருந்த தீவிரம் இல்லை!
கீதா கிருத்திகாவிடம், “கிருத்திகா, யாரோ உன் கிட்ட எதையோ தப்பா சொல்லி இருக்காங்க... தியாகு அண்ணா அப்படி பட்டவர் இல்லை...” என்றாள்!
“வேற யாரும் சொல்லலை... உங்க அண்ணாவே தான் சொன்னார்...” என்றாள் கிருத்திகா கடுப்புடன்!
“என்னது???”