(Reading time: 5 - 10 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

ஆமாம், ராஜ் தான் சொன்னார்! என்னால இங்கே இருக்க முடியாது, நானும் உங்க கூட வரேன்...”

  

விஜய் மறுப்பாக தலை அசைத்தான்!

   

பிரின்சஸ் செல்லம், சூரியன் திடீர்னு மேற்கு பக்கம் உதிக்குதுன்னு நீ சொன்னால் கூட நம்புவேன், ஆனால் அந்த தியாகுக்கு வேற ஒரு பொண்ணு கூட தொடர்பு இருக்குன்னு சொன்னேன்னு வை என்னால நம்பவே முடியாது!”

  

நான் எங்கே சொன்னேன், அவர் தான் சொன்னார்...”

  

அவன் விளையாட்டா சொல்லி இருப்பான் பிரின்சஸ்...”

  

ப்ச்... நான் சொல்றேன், கேட்க மாட்டேங்குறீங்க...”

  

கிருத்திகா...!!!”

  

அதுவரை ஒருமுறையும் அவளை அப்படி அழைத்திராத விஜய், பெயர் சொல்லி அழுத்தத்துடன் அழைக்கவும், கிருத்திகா அமைதியாக இருந்தாள்!

  

இங்கே பார் பிரின்சஸ், அந்த தியாகு லூசு பையன் உன் கிட்ட ஏன் இப்படி உளறி வச்சான்னு எனக்கு தெரியலை... ஆனால் அவன் அப்படி பட்டவன் இல்லைன்னு நான் உனக்கு கேரன்டி தரேன்... இரண்டு குடும்பமும் ரொம்ப நிறைய மன வருத்தங்களை தாண்டி, இப்போ நீ திரும்ப கிடைச்சப்புறம் தான் எல்லாம் சரி ஆகிடும்குற நம்பிக்கையில இருக்காங்க...”

  

எனக்கு ஒன்னுமே புரியலை... என்ன பிரச்சனை... என்ன நடக்குது, யார் நல்லவங்க கெட்டவங்க, ஒண்ணுமே புரியலை...”

  

உன் குழப்பத்தை என்னால புரிஞ்சுக்க முடியுது பிரின்சஸ்... நீ பார்த்தவரையில் நான் நம்பகமானவன்னு உனக்கு தோணுதா, இல்லையா?”

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.