(Reading time: 5 - 10 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

  

ம்ம்ம்ம்ம்ம்ம்...” கிருத்திகா தலையை அசைத்தாள்!

  

தேங்க்ஸ்! என் மேல நம்பிக்கை வச்சு, தியாகுவோட வீட்டிலேயே தங்கு... நான் உனக்கு பிடிக்காததா எதையும் நடக்க விட மாட்டேன்...”

  

அண்ணா, எனக்கு பிடிச்சது எது, பிடிக்காதது எது, ஒன்னும் புரியலை... நல்லது கெட்டது எதுன்னு கூட புரியலை... என்னை இப்படி தனியா விட்டுட்டு போறேன்னு சொல்றீங்களே...”

  

விஜய் அவளின் தலையை அன்புடன் வருடினான்!

   

பிரின்சஸ்... எல்லாம் உங்க இரண்டு பேருடைய நன்மைக்கு தான்...”

  

சரி அப்படியே இருக்கட்டும்... ஆனால் எங்களுக்குள்ளே முன்னாடி என்ன நடத்துச்சுன்னாவது சொல்லக் கூடாதா? என்னுடைய குழப்பம் குறையுமே?”

  

நான் எதையும் சொல்ல மாட்டேன்னு தியாகு கிட்ட சொல்லி இருக்கேன்...” விஜய் பேசி முடிக்கும் முன் கிருத்திகா அவனைப் பார்த்து கோபத்துடன் முறைத்தாள்!

   

அவளை சமாதானப் படுதுவதுப் போல கைகளை தூக்கிய விஜய், “ஆனால், உனக்கு எப்போதுமே இந்த விஜய் கிட்ட விதிவிலக்கு உண்டு... இன்னொரு தடவை உனக்கு இதுக்கு மேலே என்னால பழசு தெரியாம இருக்க முடியாதுன்னு தோணிச்சுன்னா, நேரா என்கிட்ட வந்து கேளு, நான் சொல்றேன்,” என்றான்.

  

கிருத்திகா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்!

  

விஜய்க்கும் அவளின் மனநிலை புரியாமல் இல்லை! மீண்டும் அவளின் தலையை பாசத்துடன் வருடியவன், “என்னை நம்பு பிரின்சஸ்... உனக்கு மனசுல கூட எவனாவது துரோகம் செய்ய நினைச்சா நான் வெட்டி போட்டுடுவேன்... தியாகுக்கு அது மாதிரி ஏதாவது அஃபேர் இருந்தா அவன் உன் பக்கத்துல கூட வர முடியாது... நான் வர விட்டுருக்க மாட்டேன்... என்னை நம்பு,”

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.