(Reading time: 24 - 47 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

  

”ஊப்ஸ் சாரி சாரி நான் ஏதோ கவனத்தில இருந்துட்டேன் ப்ளீஸ் கம்” என ஹரிணி உள்ளே செல்ல தருணும் புன்னகையுடன் உள்ளே நுழைந்து கதவை சாத்தினான்.

  

ஹாலில் பழைய பொருட்களை பரத்தி வைத்திருந்தாள். அனைத்துமே இளங்கோவின் ஞாபகங்கள், பொக்கிஷங்கள், அவற்றையெல்லாம் பார்த்திருக்கிறாள் என தருண் புரிந்துக் கொண்டு அவற்றை மேலோட்டமாக பார்த்தபடியே ஹரிணியை நோட்டம் விட்டான், அவளோ இளங்கோவின் போட்டோவிற்கு பக்கத்தில் நின்றபடி அதையே பார்க்க தருண் மெதுவாக பேசினான்

  

”சாரி ஹரிணி உன் மனசை நான் குழப்பிட்டேன் போல இருக்கு”

  

”ஆமாம்”

  

”நான் சொன்னதை நினைச்சி என் மேல கோபமா”

  

”அப்படியெல்லாம் இல்லை”

  

”அப்போ உன் பதில் என்ன”

  

”இளங்கோ என்னோட உலகம் அவன் இடத்தில இன்னொருத்தனை வைச்சிப் பார்க்க என்னால சத்தியமா முடியாது”

  

”இப்படித்தான் நானும் நிவேதினியை நினைச்சிக்கிட்டு பைத்தியமா சுத்திக்கிட்டு இருந்தேன், பவானி வந்த பின்னாடி என் வாழ்க்கையே மாறிடுச்சி, அதே போல உன் வாழ்க்கையும் நான் வந்த பின்னாடி மாறும் ஹரிணி”

  

”எதுக்காக என் மேல இவ்ளோ கரிசனம், நீங்க வேற ஒரு பொண்ணை கல்யாணம் செய்துக்கலாமே“

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.