”ஆனா பாவம் உன்னால 2 பொண்ணுங்க வாழ்க்கை அழிஞ்சிடுச்சி, ஹரிணி வாழ்க்கையும் அழியனுமா”
”இல்லை ஹரிணி வேற, நிவேதினி, பவானி வேற, அவங்க ரெண்டு பேரையும் நான் கல்யாணம் செய்துக்கிட்டது பணத்துக்காக ஆனா, ஹரிணியை நான் கல்யாணம் செய்துக்கப் போறது எனக்காக, அவளோட அழகு என்னை ஈர்க்குது வாழ்ந்தா இப்படியொருத்தியோடதான் வாழனும் இல்லைன்னா வாழ்ந்து என்ன லாபம் சொல்லு”
”அதுவும் சரிதான் இப்படியொரு பொண்ணோட வாழ யாருக்குதான் கசக்கும், ஹரிணியோட வாழ்ந்தா வாழ்க்கை சொர்க்கமாகும்”
”அந்த சொர்க்கம்தான் எனக்கு வேணும், நான் அவளை கல்யாணம் செய்துகிட்ட பின்னாடி வேலைக்கு போகப் போறதில்லை, அவளே சம்பாதிச்சி எனக்கு போடட்டும்”
”அடப்பாவி நல்லா திட்டம் போட்டுத்தான் காயை நகர்த்தியிருக்க அதுசரி உன்னால எனக்கு இப்ப வேலை போக போகுதே, நான் என்ன செய்றது“
”ஏன்டா நீயே இங்க வேலை செய்ய முடியலை, வேற கம்பெனிக்கு போகனும்னு சொன்ன அப்புறம் என்ன”
”இருந்தாலும் என் மேல ப்ளாக் மார்க் விழுந்துட்டா, எந்த கம்பெனியிலயும் வேலை செய்ய முடியாதே, நீ தந்த ஒரு லட்சத்தை வைச்சிக்கிட்டு என்னத்த செய்றது”
”உனக்கு ப்ளாக் மார்க் வராது நான் பார்த்துக்கறேன்“
”எப்படிச் சொல்ற“
”இப்ப நடந்ததை வைச்சி சொல்றேன், இந்நேரம் ஹரிணி மனசுல நான் இருப்பேன், இல்லைன்னாலும் நான் எதைச் சொன்னாலும் அவள் செய்வா செய்துதான் ஆகனும் வேற