மனதில் நினைத்துக் கொண்டு மென்மையாக சிரித்தபடியே ஹரிணியின் பக்கம் அமர்ந்தான் அதற்கே அவள் தள்ளி அமர அவன் மனதில் எழுந்த கோபத்தை அடக்கிக் கொண்டு வெளியே
”சாரி ஹரிணி நான் தப்பான எண்ணத்தில இப்படி உட்காரலை, உன்னை ஆறுதல் படுத்தலாம்னு வந்தேன்”
”நீங்க கிளம்புங்க, நான் என்னைப் பார்த்துக்கிறேன்“
“இவ்ளோ நடந்துமா என்னை நீ போங்கற”
”வேற என்ன செய்றது”
”என்னை கல்யாணம் செய்துக்க ஹரிணி, உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்“
”நான் யோசிக்கனும் இளங்கோவை மறந்துட்டு உன்னோட எப்படி”
”நீ இளங்கோவை மறக்கற அன்னிக்கு பார்க்கலாம், அதுவரைக்கும் இளங்கோவை நினைச்சிக்கிட்டு என்னை இளங்கோ இடத்தில வைச்சி வாழ்ந்து பாரு, அப்பதானே அந்த வாழ்க்கை உனக்கு எப்படியிருக்குன்னு தெரியும்”
”நான் யோசிக்கனும்”
”யோசி இளங்கோவை நினைச்சி யோசிக்காத உன்னை நினைச்சி யோசி, இளங்கோ வரப்போறதில்லை, அவனை நினைச்சி நீ உன் வாழ்க்கையை அழிச்சிக்காத, உன் அப்பா அம்மா உயிரோட இருந்திருந்தா அவங்களும் உனக்கு மறுமணம் செய்து வைக்கத்தான் ஆசைப்படுவாங்க”
”அப்படியா நிஜமாவா”
“ஆமாம் பெத்தவங்க எப்பவும் நமக்கு நல்லது செய்யனும்னுதான் நினைப்பாங்க, உனக்கு