(Reading time: 24 - 47 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

  

”வேணாம் ஹரிணி அவங்களால நான் நிவேதினி, பவானி இரண்டு பேரையும் இழந்துட்டேன், உன்னையும் என்னால இழக்க முடியாது, நீ எனக்கு வேணும் ஹரிணி, நீ எனக்கு வேணும்” என சட்டென அவளை அணைத்துக் கொள்ள அவளுக்கு திக்கென்றது, அவனின் நடிப்பு அப்பட்டமாக தெரிந்தது, ஹரிணியோ அவனை நன்றாக புரிந்து வைத்திருந்தாள் அதனால் சட்டென அவனை விட்டு விலகாமல் அவனை வேண்டா வெறுப்பாக அணைத்துக் கொள்ள தருணுக்கு மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது.

  

சில நொடிகள் கழித்து இருவரும் பிரிந்தார்கள்

  

”தருண் ஐ அம் சாரி, என்னாலதானே உங்களுக்கு இந்த நிலைமை நான் வேணா உங்க வீட்ல பேசி பார்க்கவா”

  

”பேசினாலும் கல்யாணம் ஆன பின்னாடி நீ அந்த வீட்டுக்கு வருவியா”

  

“இல்லை என்னால இந்த ப்ளாட் விடடு வரமுடியாது”

  

”அப்புறம் என்ன விடு, நானே அவங்களை நினைச்சி கவலைப்படலை, நீ எதுக்காக வருத்தப்படற“

  

”இருந்தாலும் குற்ற உணர்ச்சியில தவிக்கிறேன்“

  

”வேணாம் ஹரிணி சின்ன சின்ன விசயத்துக்காக உன் சந்தோஷத்தை தொலைக்காத, நாம சந்தோஷமா வாழ வேண்டிய நேரம் இது, கல்யாணத்துக்கான ஏற்பாடுகளை நான் செய்றேன், வர்ற வெள்ளிக்கிழமை நமக்கு கல்யாணம்”

  

“அதுக்கு இன்னும் 3 நாள்தானே இருக்கே அதுக்குள்ள எப்படி ஏன் இந்த அவசரம்“

  

”அவசரம்தான் நீயும் நானும் இங்க ஒண்ணா இருந்தா பார்க்கறவங்க, உன்னை தப்பா நினைப்பாங்க யாரும் உன்னை ஒரு வார்த்தை சொல்லிடக் கூடாதுன்னு நினைக்கிறேன்”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.