”சரி தருண் நீ என்ன செய்தாலும் என் நல்லதுக்காகவே செய்ற உன்னோட இந்த குணம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு”
”கூடிய சீக்கிரம் உனக்கும் என்னை பிடிச்சிடும் பாரு”
”அப்போ நானும் கல்யாண வேலைகளை பார்க்கலாமா“
”வேணாம் நீ வேலைக்கு போ, நானே எல்லா ஏற்பாடுகளையும் செய்றேன்”
“தனியாளா எப்படி”
”நீ ஹெச் ஆர் உனக்கு வேலை அதிகம், எனக்கு இப்ப எந்த வேலையும் இல்லை புதுசா ப்ராஜெக்ட் வர்ற வரைக்கும் நான் என்ன செய்றது சொல்லு”
”ஓகே உன்னோட லீவை நான் பார்த்துக்கிறேன்”
”தாராளமா அப்புறம் நமக்கு கல்யாணம் முடியறவரைக்கும் கம்பெனியில யாருக்கும் இந்த கல்யாண விசயம் தெரிய வேணாம்”
”ஏன்”
“எல்லாரும் பொறாமைப்படுவாங்க, நான் உன்னோட ஆபிசுக்கு வந்தே கொஞ்ச நாள்தான் ஆகுது, அதுக்குள்ள உன்னை மடக்கி போட்டேன்னு கொச்சையா பேசி வைப்பாங்க, இது தேவையா சொல்லு”
”புரியுது தருண்”
”ரிசப்ஷன்லயே எல்லாரும் பார்க்கட்டும்”