அப்பா அம்மா இல்லை அதனால உனக்கு தெரியலை, அதான் நான் இருக்கேனே அப்பாவா அம்மாவா நண்பனா இளங்கோவா கணவனா நீ எப்படி நினைக்கிறியோ அப்படி நான் உன்கூட இருப்பேன் ஹரிணி” என சொல்ல அதில் அவள் முகம் மலர்ந்தாள். அவளின் முகமாற்றத்தைக் கண்டு தருண் மகிழ்ந்தான்
”இப்பவாவது என்னை நீ நம்பறியா”
”நம்பறேன் தருண்”
”அப்போ நாம கல்யாணம் செய்துக்கலாமா“
”உங்க வீட்ல”
”அதைவிட்டுத்தள்ளு அவங்க சம்மதம் எனக்குத் தேவையில்லை, எனக்கு நீதான் வேணும், ஐ மீன் உன்னோட சந்தோஷம்தான் எனக்கு முக்கியம், உனக்கு என்னை கல்யாணம் செய்துக்க சம்மதம்தானே”
”சம்மதம்“
“இது போதும் கல்யாணத்துக்கான ஏற்பாடுகளை நான் செய்றேன்”
”சிம்ப்ளா ரிஜிஸ்டர் மேரேஜ் செய்துக்கலாம், எனக்கு ஆடம்பரம் பிடிக்காது”
”ஓகே நோ ப்ராப்ளம் ரிசப்ஷன் வேணா வைக்கலாமா கம்பெனி ஆளுங்க வருவாங்கள்ல”
”உன் விருப்பம் தருண்”
“இது போதும் எனக்கு விடு எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்” என சொல்லிவிட்டு தருண் அங்கிருந்து சென்றுவிட ஹரிணியோ தன் அறையில் இருந்த பீரோவைத் திறந்தாள். அதில் இருந்து தேடி ஒரு டைரியை எடுத்தாள், அதை பிரித்தபடியே அங்கிருந்த படுக்கையில் அமர்ந்தாள், ஒவ்வொரு பக்கமாக படிக்கலானாள், கவனமாக படிக்கலானாள் இதுவரை அவள்