(Reading time: 24 - 47 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

மூலமாதான் தெரிஞ்சது அந்த டைரியை படிச்ச பின்னாடிதான் உன்னோட மரணத்துக்கு தருண் காரணம்னு தெரிஞ்சிக்கிட்டேன்

  

அவனுக்கு வரவேண்டிய ப்ரமோஷன் உனக்கு கிடைச்சிடுச்சிங்கற ஆதங்கத்துல, எல்லாரும் உன்னை பாராட்டறாங்கங்கற பொறாமையில குடிபோதையில வண்டியை ஓட்டிக்கிட்டு வந்து தெரிஞ்சே உன் பைக்கில மோதி உன்னை கொன்னான், அதை சாலை விபத்தா மாத்தினான். அவனை நான் எப்படி சும்மா விடமுடியும், இந்த விசயம் தெரிஞ்சதும் அவனை கொல்ல நினைச்சேன் ஆனா, இல்லை அப்படி ஒரு நொடியில அவன் சாககூடாது அவன் நிவேதினியை பவானியை எப்படி கஷ்டப்படுத்தினான், அதே போல அவனும் கஷ்டப்படனும், அவனே தன் தவறை உணர்ந்து சாகனும் அதுவரைக்கும் அவனை நான் விடமாட்டேன், இதனால என் வாழ்க்கை நரகமானாலும் பரவாயில்லை நீ, நிவேதினி பவானி உங்க 3 பேருக்கும் நியாயம் தராம நான் ஓயமாட்டேன்

  

இப்பவும் நான் உன்னை விரும்பறேன் இளங்கோ ஐ லவ் யூ” என உருக்கமாக பேசி முடித்தாள் ஹரிணி

  

இது எதுவும் அறியாத தருணோ உற்சாகமாக தன் வீட்டிற்குச் சென்று ஹரிணியை பற்றி விளக்கமாக சொல்லி அவளுடன் தனக்கு கல்யாணம் என பெற்றோரிடம் சொல்ல அவர்கள் மறுத்தார்கள், மறுத்தால் மறுக்கட்டும் என வீட்டை விட்டு வெளியேறி விடிகாலையில் ஹரிணியின் ப்ளாட் முன் நின்றான் தருண், அவனை அந்நேரம் அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

  

”தருண் வாங்க உள்ள, என்ன இது கையில லக்கேஜ் பேக்கோட வந்திருக்கீங்க ஊருக்கு போறீங்களா”

  

”இல்லை ஹரிணி நம்ம விசயத்தை வீட்ல சொன்னேன், அவங்க ஒத்துக்கலை அதான் வீட்டை விட்டுட்டு நீதான் வேணும்னு வந்துட்டேன்“

  

”அய்யோ கடவுளே ஏன் இப்படி செய்தீங்க, எனக்குதான் அப்பா அம்மா இல்லை ஆனா, உங்களுக்கு அப்பா அம்மா இருந்தும், அவங்களோட வெறுப்பை சம்பாதிச்சிதான் இந்த கல்யாணம் நடக்கனுமா என்ன, அவங்க சம்மதத்தோடவே நடக்கட்டுமே”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.