(Reading time: 31 - 62 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

முதலில் இருப்பான். அவனைத்தான் அனைவரும் தேடுவார்கள்.

  

அவனுடைய திறமையால் பல ஆர்டர்கள் வந்தது. அதனால் மோகனசுந்தரமும் அவனையே மீட்டிங், டீலிங், கப்பலில் சரக்கு அனுப்புவது போன்ற பொறுப்புள்ள வேலைகளை தருவார். ரிஷியும் முகம் சுழிக்காமல் செய்வான்.

  

கருணாகரனுக்கு இதே போல வேலை செய்ய வேண்டும் என்ற ஆசை அதிகம். அவனும் படித்திருக்கிறான் கம்பெனியில் 12 மணி நேரம் வேலை செய்கிறான். பல மீட்டிங், டிலீங்குக்கும் ரிஷியிடம் கூடவே சென்று கவனிப்பான்.

  

என்ன இருந்தாலும் அவனுடைய ஐடியாலஜி, எதிரில் இருப்பவர்களுடன் பேச்சுவார்த்தை நடக்கும் போது உடனுக்குடன் முடிவு எடுக்கும் திறன் குறைவுதான். அதற்காக அவன் திறமையானவன் தான் ஆனாலும் ரிஷியளவு திறமை இல்லை.

  

உதாரணத்திற்கு கருணாகரனும் இன்று மீட்டிங் இருக்கறது என்றால் 2 நாட்களுக்கு முன்னாடியே பிரசன்டேஷன் ரெடி செய்வது மீட்டிங்கில் பேசுவதற்காக அனைத்து விதமான ஸ்பீச்சையும் ரெடிசெய்து பக்காவாக வருவான்.

  

ஆனால் ரிஷிக்கு மீட்டிங்கில் கலந்துக்கொள்வதற்கு அரை மணி நேரம் முன்பு சொன்னால் போதுமானது. ரிஷிக்கு எந்த ஸ்பீச், பிரசன்டேஷன் இல்லாமலே தன்னுடைய பேச்சுசாதூர்யத்தால் எதிராளியின் கேள்விகளுக்கு பதில் சொல்லி அவர்களை வீழ்த்தி பல ஆர்டர்களை தன் கம்பெனிக்காக பெறுவான்.

  

அவனுடைய ஐடியாலஜி மற்றும் புத்திசாலித்தனம் உடனுக்குடன் முடிவு எடுக்கும் திறமையை கண்டு மற்ற தொழிலதிபர்களும் வியந்து பாராட்டுவார்கள். தங்களுக்கு டீலிங் மூலம் ஆர்டர்ஸ் கிடைக்கவில்லையென்றாலும் ரிஷியின் திறமையான பேச்சுவார்த்தையை கவனித்து அவனை பாராட்டவும் செய்வார்கள்.

  

ரிஷியை போல தன்னால் ஏன் வரமுடியவில்லை என்ற ஆதங்கம் கருணாவுக்கு பல வருடங்களாக உண்டு. அதனால் அண்ணன் கம்பெனி விஷயமாக எப்போது எங்கு சென்றாலும் கூடவே செல்வது வழக்கம்.

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.