(Reading time: 31 - 62 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

வளர்க்க தெரியல வந்துட்டான் எனக்கு வேலையை கத்துகொடுக்க” என மனதில் நினைத்தவன் அவளிடம் பேச மறுத்து மாணிக்கவேலிடம் பேசினான்

  

இப்ப என்னதான் சொல்ல வர்றீங்க வழிய விடறீங்களா இல்லையாஎன கோபமாக ரிஷி கேட்க

  

தாராளமா வழியை விடறேன். அப்படியே என்னோட சரக்கையும் உன் கப்பல்ல ஏத்திக்க நான் தகராறு பண்ணாம போய்டுறேன்

  

நான் முடியாதுன்னு சொன்னா என்ன பண்ணுவீங்கஎன்றான் ரிஷி

  

முடியாதுங்கற வார்த்தை உனக்கு சகஜமா வருது ரிஷி ஏதாவது ஒரு விஷயத்தில நீ பணிஞ்சி தான் போகனும்என அவள் கூறும் போதே பற்றிக்கொண்டு வந்தது.

  

இதபாரு தேவயில்லாம வார்த்தையை விடாத நான் உங்கப்பா கிட்டதான் பேசறேன் உன் கிட்ட இல்லை

  

என் கிட்ட பேச வேணாம்னு இங்க யாரும் தடுக்கலயே என்னப்பா சொல்றீங்க

  

என அவள் சொல்லவும் அவர் அவளின் பேச்சைக்கேட்டு சிரிக்கவும் ரிஷிக்கு இருவரின் செயலைக்கண்டு நொந்து கொண்டவன்

  

உங்களுக்கு என் கப்பல்ல இடம் தரமுடியாது உங்களால ஆனதை பாருங்கஎன கடுமையாக பதில் சொல்லவும் மாணிக்கவேல் தன்னுடன் கூட்டி வந்த ஆட்களை அவனிடம் அனுப்பினான்.

  

அவனுக்கு புரிந்துவிட்டது என்னுடன் சண்டையிட ஆட்களை கூட்டி வந்திருக்கிறான் என, சரி அவன் ஆசையை ஏன் கெடுப்பானேன் என முடிவு செய்தவன் வந்த 5 பேர்களிடம் தனியாளாக நின்று சண்டை போட்டான். இவன் சண்டை போடுவதை யாரோ அர்ஜூனிடம் கூற அவனும் ஓடிவந்து தன் பங்குக்கு ஒருவனை அடிக்க ரிஷி மற்ற 4 பேர்களையும் பந்தாடிக்கொண்டிருந்தான்.

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.