(Reading time: 31 - 62 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

  

அவன் லண்டன் கல்லூரியில் படிக்கும் போதே பல வித சண்டை பயிற்சிகளை கற்றுத்தேர்ந்ததால் மாணிக்கவேல் அனுப்பிய ஆட்களை அவன் சர்வ சாதாரணமாக கையாண்டான். கப்பல் துறைமுகம் என்பதால் சண்டைய நிறுத்த ஆபீசர்களும் போலீசும் வந்தது. வந்தவர்கள் சண்டையை தற்காலிகமாக நிறுத்தினார்கள். அவர்களிடம் மாணிக்கவேல்

  

பாருங்க சார் இவன் பண்ற அயோக்கியதனத்தை எங்க ஆளுங்கள எப்படி அடிச்சிருக்கான் பாருங்க இவனை முதல்ல அரஸ்ட் பண்ணுங்க சார்என அவர் கூறவும் ஆபீசர்கள் ரிஷியிடம் வந்தனர். அவன் உடனே தன்னிடமிருந்த பேப்பர்களை காட்டி

  

சார் இந்த கப்பலில் சரக்கு ஏற்ற நான் 6 மாசம் முன்னாடியே புக் பண்ணிட்டேன். என்னோட சரக்கை வைக்கவே இடமில்லாம இருக்கும் போது இந்தாளு இங்க வந்து தகராறு செய்றான் அவனோட சரக்கை வைக்கனுமாம். முடியாதுன்னு சொன்னதுக்காக அவனோட ஆட்களை விட்டு என்னை அடிச்சி விரட்ட முயற்சி செஞ்சான். தற்காப்புக்காக நானும் சண்டை போட வேண்டியதா போச்சி. என் மேல தப்பு கிடையாது வீணா என்கிட்ட வம்புக்கு வராங்க சார்என அவன் சுருக்கமாகவும் தெளிவாகவும் கூற அவர்களில் ஒரு ஆபீசர் ரிஷி முன் வந்து

  

எங்களுக்குத் தெரியும் ரிஷி உன்னை பத்தியும் தெரியும் இந்தாளை பத்தியும் தெரியும் நீ இவ்ளோ விளக்கம் சொல்லனும்னு அவசியமில்லையே நீ போ உன் வேலைகளை பாரு நான் இவங்களை பார்த்துக்கிறேன்என கூறிவிட்டு அவரிடம் வந்தான்

  

என்ன சார் எப்ப இங்க வந்தாலும் ஏதாவது பிரச்சனை செய்யனும்னு நினைச்சிகிட்டுதான் வருவீங்களோ அது என்ன ரிஷி மட்டும் தான் உங்க கண்ணுக்கு தெரியறானா மத்த கப்பல் இருக்குல்ல அதுல ஏத்த வேண்டியதுதானே உங்க சரக்கை, இல்லைன்னா கஸ்டம்ஸ்ல நீங்க புகார் கொடுத்திருக்கனும் அதைவிட்டுட்டு இப்படி அடியாட்களை கூட்டிட்டு வர்றது சரியில்லை கிளம்புங்க நேராக கஸ்டம்ஸ் ஆபீசரை போய் பாருங்க ரிஷி அப்ரூவல் வாங்கிட்டு கப்பல்ல சரக்கை ஏத்தறான் அவனை தொந்தரவு செய்ய நினைச்சா உங்களை நாங்க கைது செய்வோம்என சொல்லவும் மாணிக்கவேல் தன் பங்கிற்கு

  

நீங்கள்ளலாம் அவன் கிட்ட லஞ்சம் வாங்கிட்டு வேலை செய்றீங்க அதனால தான் அவன்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.