“அப்படி நான் நடந்துக் கிட்டா அது நான் விரும்பி கல்யாணம் செய்துக்கிட்ட என் மனைவிக்கு செய்ற துரோகம் இல்லையா???? நீ கிருத்திகாவே தான்... ஆனால் சின்னக் குழந்தையா இருக்க கீர்த்தி... உனக்கு பழசு எல்லாம் முழுசா ஞாபகத்துக்கு வரட்டும்... அப்புறம் மனம் விட்டு பேசி மேலே என்ன செய்றதுன்னு பார்ப்போம்...”
கிருத்திகா இப்போது ‘ஸ்டோன் ஸ்டேச்யூ’ ஆக மாறி அசையாமல் அமர்ந்திருந்தாள்!
அவளின் பதிலுக்காக காத்திருந்த தியாகராஜன் அவள் எதுவும் சொல்லாமல் இருக்கவும், “என்ன கீர்த்தி, ஒண்ணுமே சொல்ல மாட்டேங்குற??? ரொம்ப குழப்பிட்டேனா???” என்றான் கவலையுடன்!
“இல்லை... நீங்க குழப்ப எல்லாம் இல்லை... எனக்கு தான் என்ன சொல்றதுன்னு தெரியலை,” என்றாள் கிருத்திகா மெல்ல!
“கீர்த்தி, ஒருத்தனுக்கு ஒருத்தி எனும் கொள்கையை பின் பற்றுபவன் நான்... அந்த பழைய கீர்த்தியை அப்படியே மனமார விரும்பி கல்யாணம் செய்துக் கிட்டவன் நான்... எப்போவுமே அவளுக்காகவே தான் இருப்பேன்...”
கிருத்திகா அவனின் பேச்சில், அதில் தெரிந்த அன்பில் நெகிழ்ந்துப் போனாள்...!
இவனை போய் கற் சிலை, அது, இது என்று என்ன எல்லாம் நினைத்து விட்டாள்...!
விஜய் அண்ணா சொன்னது ரொம்பவும் சரி! இவனாவது இன்னொரு பெண்ணிடம் தொடர்பு வைத்திருப்பதாவது! வாய்ப்பே கிடையாது!
மனைவி அருகே இருக்கும் போதே மற்ற பெண்களை பார்த்து வழியும் ஆண்கள் அதிகம் இருக்கும் இந்த காலத்தில் இப்படியும் ஒருவனா????
“ராஜ்...” என ஏதோ சொல்ல தொடங்கியவள், அதை நிறுத்தி விட்டு, “ஐ ஆம் சாரி... நான் உங்களை அப்படி கூப்பிடலாமா??? பரவாயில்லையா??” என்றாள் குற்ற உணர்வுடன்!