தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 22 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
விஜய் ஃபோனில் சொன்னதுப் போல ஒரே நிமிடத்தில் லைப்ரரி அருகே வந்து விட, அவனை பார்த்து செல்லமாக முறைத்தாள் கிருத்திகா!
“நீங்க லைப்ரரி உள்ளே வந்தா என்ன? என்னை ஏன் வெளியே கூப்பிடுறீங்க?”
“புக்ஸ்க்கும் எனக்கும் ரொம்பஆஆஆஆ தூரம் பிரின்சஸ்... ஆமாம், நீ எந்த புக்கை தேடி லைப்ரரிக்கு வந்த?”
“ஹ்ம்ம்...”
“ஹேய் பிரின்சஸ், கம் ஆன்... என் கிட்ட சொல்ல இவ்வளவு யோசிக்குற? நாம ரெண்டுப் பேரும் எப்போதும் பெஸ்ட் ஃப்ரென்ட்ஸ்... இந்த அண்ணன் பத்தி உனக்கு ஒன்னுமே ஞாபகம் இல்லையா என்ன?”
“இல்லை...!”
“அட, பேட் தங்கச்சி! இதுக்கு நான் கேட்காமலே இருந்திருக்கலாம்! சரி, நீ எந்த புக் தேடி வந்த அதை சொல்லு... நானே ஒரு நடமாடும் என்சைக்கிலோபிடீயா தான்...”
“ப்ச்... இது வேற மாதிரி புக்...”
“அப்படி என்ன புக்?”
“நீங்க தான் கேட்டீங்க... ஹுஹ்... கணவனை கைக்குள் போட்டுக் கொள்வது எப்படி? இல்லன்னா கணவனை மயக்குவது எப்படி... இந்த மாதிரி புக்ஸ்...”
கிருத்திகா கண்களை உருட்டி சொல்ல, விஜய் பே பே என விழித்துக் கொண்டே, “வாட்???” என்றான்!
“இப்படி ஒரு ரியாக்ஷன் காமிச்சு பயமுறுத்தாதீங்க!”