(Reading time: 6 - 12 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

  

ஹையோ, கஷ்டம் கஷ்டம்...!!!”

  

ஹா ஹா ஹா! பிரின்சஸ், உன்கிட்ட இப்படி பேசி எவ்வளவு நாள் ஆச்சு... உனக்கு என்னை பத்தி எதுவுமே ஞாபகம் இல்லையா?”

  

ப்ச்... இல்லை... உண்மையா சொல்ல போனா எதுவுமே ஞாபகம் இல்லை... அம்மா அப்பா, அத்தை மாமா, நீங்க, சிவா, விஷ்ணு... ஹுஹும்... ஒன்னுமே தெரியலை...”

  

தியாகுவை இந்த லிஸ்ட்ல மிஸ் செய்துட்டீயே???”

  

மிஸ் செய்யலைண்ணா...” என்ற கிருத்திகா, தயக்கத்துடன் மேலே எதுவும் சொல்லாமல் இருந்தாள்.

  

என்ன பாதியிலேயே ஸ்டாப் செய்துட்ட??? தியாகு பத்தி உனக்கு ஞாபகம் இருக்கா???”

  

அவளுக்கு அவளின் கணவனின் நினைவும் இல்லை தான்... ஆனால் அவளின் குடும்பத்தினர் அவளை கண்டுப்பிடித்த முதல் நாள் முதலே, அது ஏனோ அவளின் ராஜ் மட்டும் அவளுக்கு மிகவும் பரிச்சயமானவனாக, மிகவும் நெருங்கிப் பழகிய ஒருவனாக மனதிற்கு தோன்றினான்...

  

அவனை அவளால் இயல்பாக சீண்ட முடிந்தது... அவனிடம் கோபப் பட முடிந்தது...

  

ஆனால், மற்றவர்களிடம் அது என்னவோ இப்போதும் சிறிய இடைவெளி இருக்க தான் செய்தது!

  

இதைப் பற்றி எல்லாம் விஜயிடம் எப்படி சொல்வது என்று யோசித்தவள், எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.

  

அவளின் பதிலுக்கு காத்திருந்த விஜய், அவள் மௌனமாகவே இருக்கவும், அவளை தேற்ற முயன்றான்!

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.