(Reading time: 22 - 43 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

”ஹரிணி காபி சாப்பிடலாமா” என அன்பாக அழைக்க அவளோ முறைத்தாள்

  

”என்னாச்சி ஹரிணி ஏன் முறைக்கற”

  

”தருண் நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன், என்னை பேர் வைச்சி கூப்பிட வேணாம்னு இந்த உறவு முறை எல்லாமே ஆபிசுக்கு வெளியதான், இங்க நான் ஹெச் ஆர் புரியுதா” என அதிகாரமாக பேச அவளை ஓங்கி அறையும் எண்ணம் ஒரு நொடி வந்து மறுநொடியே மறைந்தது தருணுக்கு”

  

”சாரி மேடம் ஏதோ நினைப்பில வந்துட்டேன்”

  

”இந்த நினைப்பெல்லாம் வீட்டோட, இங்க வந்தா நாம வேலையிலதான் கவனமா இருக்கனும்”

  

”சாரி காபி சாப்பிடலாமா”

  

”சாரி தருண் வேலை அதிகமா இருக்கு, நான் காபியை வரவழைச்சி சாப்பிட்டுக்கிறேன், நீங்களும் நிறைய லீவு போட்டு இருக்கீங்க உங்களோட பென்டிங் வேலைகளை முடிச்சிட்டீங்களா“

  

”இன்னும் இல்லை”

  

”அதை போய் முடிங்க ப்ளீஸ் கிளம்புங்க” என விரட்ட அவனோ முகத்தை தொங்க போட்டுக்கொண்டு தன் இடத்திற்கு வந்தான், அவனுக்கு காபி சாப்பிடும் எண்ணமே போய்விட்டது.  முடிக்காத வேலைகளை முடிக்கலானான்.

  

மாலை நேரம் அனைவரும் சென்றபின் ஹரிணியும் கிளம்ப தருணும் வந்தான் அவளோ அவனை நிப்பாட்டினாள்

  

”பென்டிங் வேலைகளை முடிச்சிட்டீங்களா“

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.