என சொல்ல அவளுக்கு புரிந்தது உடனே பேச்சை மாற்றினாள்
”அப்படியா பரவாயில்லை இதுக்காக நான் கோபப்பட மாட்டேன், நீங்க பவானியை நினைச்சிக்கிட்டு சாப்பிடுங்க நான் இளங்கோவை நினைச்சிக்கிட்டு சாப்பிடறேன்” என சொல்ல நிலைகுலைந்தேப் போனான் தருண்.
டின்னர் முடிந்ததும் வீடு திரும்பினார்கள் இருவரும், ஒரே அறையில் படுக்கையில் ஹரிணியும் தரையில் தருணும் படுத்திருந்தார்கள். தருணுக்கோ அவன் சாப்பிட்ட உணவு செரிக்காமல் வாந்தி வருவது போல தோன்ற அவனோ அதிர்ந்து எழுந்து ஹரிணியை பார்த்தான், அவள் நன்றாக உறங்குவதைக் கண்டு நிம்மதியாகி அவசரமாக பாத்ரூம் சென்று வாந்தி எடுத்தான், அந்தச் சத்தம் கேட்டு ஹரிணி எழுந்தாள். வாந்தி எடுத்து முடித்து ஓய்ந்து போய் வந்தவன் ஹரிணியிடம் சிக்கினான்
”என்னாச்சி தருண், எதுக்காக வாந்தி எடுத்தீங்க”
”அதுவா அது”
”உங்களுக்கு சாப்பாடு பிடிக்கலையா அது ஒத்துக்கலையா”
”இல்லை அது வந்து”
”இளங்கோ இடத்தில என்னிக்குமே உங்களால வர முடியாது தருண், இதைதான் நான் கல்யாணத்துக்கு முன்னாடியே சொன்னேன் ஆனா, நீங்க அதை நம்பலை, இப்ப பாருங்க என்னாச்சின்னு“
”அய்யோ இல்லை இல்லை ஹரிணி அது சாப்பாடு சாப்பிட்டதால வாந்தி வரலை அதுக்கு அப்புறம் நான் ஒரு ஜூஸ் குடிச்சேன் அதனால வாந்தி வந்தது”
”ஓ அப்படியா நான் பயந்துட்டேன் தருண் எங்க நம்ம வாழ்க்கை கேள்விக்குறியாயிடுமோன்னு நினைச்சிட்டேன்”