”உங்களோடன்னா”
”நானும் இளங்கோவும்தான்”
”அப்படியா” என்றான் கடுப்பாகி
”முதல் முறை இந்த ஓட்டல்லதான் நாங்க சந்திச்சோம், எங்களோட ஃபுட் டேஸ்ட்தான் எங்களை சேர்த்து வைக்க தூண்டுதலா இருந்தது, நான் எதை விரும்பி சாப்பிட்டேனோ, அதையே அவனும் சாப்பிட்டான் இது எதேச்சையா நடந்தது, சாப்பிடற விசயத்தில நாங்க அவ்வளவு ஒத்துமையா இருந்தோம், தனித்தனியா சாப்பிட்டுக்கிட்டு இருந்த நாங்க கொஞ்ச நாள்ல சேர்ந்து சாப்பிடற அளவுக்கு வந்தோம், அப்படியே பழக ஆரம்பிச்சி காதலிக்க தொடங்கி இதே ஓட்டல்லதான் எனக்கு இளங்கோ காதல் பிரப்போஸ் செய்தாரு, அதே போல இதே ஓட்டல்லதான் கல்யாணத்தை பத்தி பேச்சு எழுந்தது, அதுல இளங்கோ நான் எதிர்பார்க்காத நேரத்தில மோதிரம் காட்டினாரு, அப்போ எப்படியிருந்தது தெரியுமா வானத்தில பறக்கற மாதிரி நான் ஒரு நொடிகூட யோசிக்கலை, உடனே அந்த மோதிரத்தை வாங்கிட்டேன், இளங்கோவையும் ஏத்துக்கிட்டேன், அப்புறம் எங்களுக்கு கல்யாணம் ஆன பின்னாடி இங்க வந்துதான் முதல்ல சாப்பிட்டோம், இது எங்களோட ராசியான ஓட்டல் தருண், போக போக உங்களுக்கும் இது ராசியாயிடும் பாருங்க” என சொல்ல அவள் சொல்வதை கடுங்கோபத்தில் கேட்டப்படி இருந்த தருணுக்கு பேரர் கொண்டு வந்து வைத்த உணவு சுத்தமாக பிடிக்கவில்லை.
ஆனால் ஹரிணியோ அந்த உணவை விரும்பி சுவைத்து சாப்பிடலானாள். தனக்கு பிடிக்கவில்லை என சொன்னால் விடமாட்டாளே, நடிக்க வந்தாயிற்று நடித்து தொலைவோம் என நினைத்து வேண்டா வெறுப்பாக சாப்பிடத் தொடங்க அதை ஓரக்கண்ணில் கண்ட ஹரிணிக்கு உள்ளுக்குள் சிரிப்பாக இருந்தது
”சாரி தருண் உன்னை கஷ்டப்படுத்ததான் உனக்கு பிடிக்காத உணவுகளை ஏற்கனவே நான் இங்க போன் பண்ணி சொல்லிட்டேன், இளங்கோவுக்கு இதெல்லாம் பிடிக்காது, பிடிக்கும்னு நான் சொன்னதாலயே பிடிக்காத உணவை பிடிச்ச மாதிரி ரசிச்சி சாப்பிடறல்ல, இதெல்லாம்