”அய்யோ நான் அதுக்காக சொல்லலை, எதுக்காக உங்க திங்ஸ் வைச்சிருக்கீங்கன்னு கேட்டேன்”
”இல்லை எனக்குப் புரியலை”
”ப்ச் இதுல புரிய என்ன இருக்கு தருண், நீங்க என்ன சொன்னீங்க, இளங்கோ இடத்தில நான் இருப்பேன்னு, அப்படியிருக்கறப்ப உங்களோட பொருட்களுக்கு இந்த ரூம்ல இடம் இல்லை, இதை எல்லாம் எடுங்க“
”இதை எடுத்துட்டு நான் என்ன செய்றது நான் எங்க தங்கறது”
”தாராளமா நீங்க இங்க தங்கலாம் ஆனா, உங்களோட உடைமைகள் இங்க இருக்க கூடாது“
”அப்படின்னா”
”இளங்கோவோட பொருட்கள் இங்க இருக்கு அதையே நீங்க பயன்படுத்தலாமே”
”என்னது நானா” என அலறினான் தருண்
”ஆமாம் நீங்கதான் ப்ளீஸ் எனக்காக நீங்க அவனோட பொருட்களை துணிகளை பயன்படுத்தினா எனக்கு அவன் இல்லைங்கற எண்ணமே இருக்காது, மெல்ல மெல்ல உங்களை அவனா நினைச்சி ஏத்துக்க வாய்ப்பிருக்கு, யோசிச்சிப் பாருங்க தருண் நான் சொல்றது உங்களுக்குப் புரியும்” என சொல்ல அவள் சொன்னதை அவன் யோசிக்காமல் பழையதை நினைக்கலானான்.
”பவானி நான் உன்னை கல்யாணம் செய்துக்கிட்டது நீ கொண்டு வர்ற நகை, துணி, பணத்துக்காக இல்லை என்னோட நிம்மதிக்காக, எனக்கு விருப்பம் இல்லாத வேலையை தயவு செய்து நீ செய்யாத பவானி”