(Reading time: 22 - 43 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

  

”இருக்கலாம் ஆனா என் மனசுல நீ இடம்பிடிக்கனுமன்னா எனக்கு பிடிச்ச மாதிரி நீ நடந்துக்கனும், நிவேதினியோட பொருட்களை நீ பயன்படுத்து, அப்பதான் எனக்கு நிவேதினி இல்லைங்கற எண்ணம் மறையும், உனக்குள்ள அவள் இருக்காள்ன்னு நினைப்பு வந்தாலே தன்னால என் மனம் மாறி உன்னை நான் ஒரு நாள் ஏத்துக்குவேன் நம்பு பவானி” என சொல்லவும் அவன் இறுதியாக சொன்னதை மனதில் வைத்துக் கொண்டு சரியென தலையாட்டிவிட்டு தனக்கென இருந்த பொருட்களை, துணிகளை ஸ்டோர் ரூமில் மூட்டைகட்டி  போட்டு விட்டு நிவேதினியின் பொருட்களை பயன்படுத்த ஆரம்பித்தாள்.

  

”அப்படித்தான் இருக்கனும், இப்பபாரு நிவேதினியோட உடை உனக்கு அப்படியே பொருந்தது, இதுல உன்னைப் பார்க்கறப்ப எனக்கு நிவேதினி இல்லைங்கற எண்ணமே வரலை, எல்லாம் கொஞ்ச நாள்தான், அட்ஜஸ்ட் பண்ணிக்கோ பவானி, நிவேதினி யாரோ இல்லை உன்னோட அக்கா, அவளோட உடைமைகளை நீ பயன்படுத்தறதுதானே நியாயம், உனக்கு முழு உரிமையை நான் தந்திருக்கேன், நீ அவளோட துணிகளை, பொருட்களைப் பயன்படுத்திக்கலாம் தப்பில்லை சரியா” என தருண் சொல்ல அவளுக்கு வெறுப்பு வந்தாலும் வேறு வழியில்லாமல் சரியென தலையாட்டினாள்.

  

உண்மையில் அவளுக்கு இப்படி வாழ விருப்பமில்லை, நிவேதினியை மறந்து தன்னை எப்போது ஏற்றுக் கொள்வாரோ அதுவரை நிவேதினியாக, பவானியாக இரட்டை வேடம் கட்ட வேண்டுமா என நினைத்து நொந்துப் போனாள். அவளின் அந்த நொந்துப் போன முக ஜாடை இப்போது தருணிடம் தென்பட்டது. அவனும் ஹரிணியின் பேச்சைக் கேட்டு சரியென தலையாட்ட ஹரிணியோ தருணின் உடைமைகளை எடுத்து ஸ்டோர் ரூமில் போட்டுவிட்டு இளங்கோவின் பொருட்களை துணிகளை அவனிடம் தந்தாள்

  

”இந்தா தருண் இளங்கோவுக்கும் உனக்கும் ஒரே அளவுதான்னு நினைக்கிறேன், இது உனக்கு மேட்ச் ஆகும், இனி நீ இளங்கோ பயன்படுத்தின பொருட்களை பயன்படுத்து, அப்பதான் என் மனசு தெளிவாகும் இல்லைன்னா இளங்கோவுக்கு நான் துரோகம் செய்துட்ட மாதிரி குற்ற உணர்வுல மாட்டி கஷ்டப்படுவேன், அதனால உனக்கும் எனக்கும் நடுவில பிரிவு வந்தாலும் வரலாம்“

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.