(Reading time: 22 - 43 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

”நீங்க என்ன சொல்றீங்க எனக்குப் புரியலையே, இப்ப உங்க விருப்பம் இல்லாம நான் என்ன செய்துட்டேன்“

  

”இதெல்லாம் என்ன பவானி” என கேட்க அவளோ பார்த்தாள், அவளது உடைமைகள் இருந்தது

  

”என்னோட பொருட்கள் இதுல என்ன பிரச்சனை உங்களுக்கு”

  

”பிரச்சனைதான் பவானி, நிவேதினியும் நானும் இருந்த ரூம் இது, இங்க அவளோட நினைவுகள் மட்டுமில்லை அவளோட பொருட்களும் நிறைஞ்சிருக்கு, நீ வந்ததும் அவளோட பொருட்களை தூக்கி எறியலாமா அது தப்பில்லையா, என் மனசுல இருக்கற நிவேதினியோட நினைவுகளை எப்படி என்னால தூக்கி எறிய முடியாதோ அதே போல அவளோட பொருட்களையும் என்னால தூக்கி போட முடியாது”

  

”அப்போ என்னோட பொருட்களை நான் எங்க வைச்சிக்கறது, இருக்கறது ஒரே பெட்ரூம், இங்கதானே நாம சேர்ந்து வாழனும், அப்ப இங்கதானே என் பொருட்கள் இருக்கனும்”

  

”இருக்கலாம் ஆனா இப்போ இல்லை கொஞ்ச நாள் போகட்டும், அதுவரைக்கும் நிவேதினியோட பொருட்களை நீ தூக்கி எறியாத”

  

”என்னுடைய பொருட்களை எங்க வைக்கிறது”

  

”அதான் இருக்கே நிவேதினியோட பொருட்களை நீ பயன்படுத்து“

  

”என்னது”

  

”இதுல என்ன தப்பிருக்கு, அவளோட தருணையே நீ பயன்படுத்திக்க வந்துட்ட பின்னாடி அவள் உடுத்தின துணி, அவள் பயன்படுத்தின பொருட்களை நீ பயன்படுத்தறதுதானே நியாயம்”

  

”ஆனா அதெப்படி என்னால அவங்களோட துணியை போட்டுக்க முடியும், என்கிட்டயே இருக்கு”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.