எடுத்தான் தருண்
”சாரி தருண் என்னை மன்னிச்சிடு நான் செய்தது தப்புன்னு படுதா” என கேட்க அவனோ ஆம் என நினைத்தான் ஆனால் சொல்ல முடியவில்லை
”சே சே இல்லையே எதுக்கு மன்னிப்பெல்லாம் நீ கரெக்டா இருக்க, இப்படி நீ இருக்கறதுதான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மேடம்”
”மேடம் இல்லை ஹரிணி” என்றாள் கலகலவென சிரித்துவிட்டு அவனுக்கு சிரிப்பு கூட வரவில்லை
”ஓ ஹரிணி சாப்பிட்டியா“
”இப்பதான் முடிச்சேன் நீ வரும் போது சாப்பிட்டு வந்துடு, நான் போய் தூங்கறேன் குட்நைட்” என சொல்லிவிட்டு அவள் போன் கட் செய்ய கோபத்தில் அந்த போனை போட்டு உடைத்தான் உடைத்தபின் நொந்துப் போனான்
”போன் போச்சே இப்படியெல்லாம் நடக்கும்னு நினைச்சிருந்தா கண்டிப்பா நான் இந்த கல்யாணம் செய்திருக்க மாட்டேன், ஒவ்வொரு நாளும் நரகத்தில வாழற மாதிரியிருக்கு” என சொல்ல ஏதோ ஒரு சத்தம் கேட்டதும் அவனுக்கு பயம் அதிகரித்தது, அவன் அக்கம் பக்கம் சுற்றி பார்த்துவிட்டு பயத்துடன் வேலை செய்ய இயலாமல் தவித்து உடைந்த போனை பத்திரப்படுத்திவிட்டு அவசரமாக அங்கிருந்து கிளம்பினான்
”ஆஹா வேலையை முடிக்காம கிளம்பறோமே ஹரிணி என்ன சொல்வாள்ன்னு தெரியலையே அவளுக்கு தெரிஞ்சாதானே எல்லா வேலையும் முடிஞ்சிடுச்சின்னு சொல்லிடலாம் இப்ப உடனே போனா அவளுக்கு சந்தேகம் வரும், அதுவரைக்கும் எங்கயாவது இருந்துட்டுப் போகலாம்” என நினைத்தவன் பைக்கில் சென்றான், பசி வேறு வயிற்றை கிள்ள ஹரிணி அழைத்துச் சென்ற அதே ஓட்டலுக்குச் சென்றான்.
அவனைக் கண்டதும் பேரர் ஹரிணி சொன்ன உணவுகளையே கொண்டு வந்து வைக்க கடுப்பாகி அவனை திட்டினான் தருண்