”இன்னும் இல்லை மேடம்“
”நாளைக்கு புது ப்ராஜெக்ட் வரப்போகுது, இப்ப வரைக்கும் பென்டிங் வெலைகளை வைச்சிருந்தா அப்போ புது ப்ராஜெக்ட் வேலைகளை எப்படி பார்ப்பீங்க”
”அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்”
”நோ வே இங்கயே இருந்து எவ்ளோ நேரம் ஆனாலும் சரி, பென்டிங் வேலைகளை முடிச்சிட்டு கிளம்புங்க”
”ஆனா ஹரிணி” என சொல்ல வர அவளோ தடுத்து
”மேடம்” என அழுத்தமாகச் சொல்ல அவன் கடுப்பாகி
”மேடம் ப்ளீஸ் நான் நாளைக்கு வந்து பார்க்கிறேனே“
”முடியாது தருண், இருந்து வேலைகளை முடிச்சிட்டு வாங்க நான் கிளம்பறேன்” என சொல்லிவிட்டு அவள் சென்றுவிட தருணுக்கு வாழ்க்கையே வெறுத்துப் போனது.
வேண்டா வெறுப்பாக தன் இடத்திற்குச் சென்று தன் வேலைகளை செய்யலானான், சிறிது நேரம் கழித்து அவனுக்குள் ஒருவித பய உணர்வு தோன்றியது, சுற்றி முற்றிப் பார்த்தான், அவன் மட்டுமே இருக்க அங்கு ஆபிசில் யாரும் இல்லாமல் வெறிச்சோடி இருந்தது, அந்த தனிமை அவனை பயமுறுத்தியது
”ஆபிசா இது பேய் வீடு போல இருக்கு, இவ்ளோ அமைதியா இருக்கே, பயமாயிருக்கே, இதுல எப்படி நான் வேலை செய்றது வேலையை முடிக்காம போனா ஹரிணி எதுவும் சொல்ல மாட்டா ஆனா ஹெச் ஆர் நாளைக்கு திட்டுவாங்களே, எல்லாம் தலையெழுத்து இவளை கட்டிக்கிட்டு வேலைக்கு போகாம இருக்கலாம்னு பார்த்தா, இவள்கிட்ட நல்ல பேர் எடுக்கறதுக்காகவாவது இந்த வேலையில இருக்கனும் போல இருக்கே, எல்லாம் நேரக்கொடுமை” என சொல்லிய நேரம் ஹரிணி அவனுக்கு போன் செய்தாள் அதை ஆர்வமாக