(Reading time: 7 - 14 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

எனக்கு கோபம் மட்டும் இல்லைங்க பிடிவாதமும் அதிகம் தான்...” என்றாள்!

  

அது தான் எனக்கும் தெரியுமே... உன்னை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க நான் பட்ட கஷ்டம் எனக்கு தானே தெரியும்...”

  

க்கும்... ஏதோ அந்த பாலா வந்து அங்கே சீன் க்ரியேட் செய்ததுனால தப்பிச்சீங்க, இல்லைன்னா இன்னமும் நீங்க என்னோட ஹாஸ்டலுக்கும், காலேஜுக்கும் மாத்தி மாத்தி அலைஞ்ஜிட்டே இருந்திருக்க வேண்டியது தான்...”

  

அவனால அது மட்டும் தானா நடந்தது? என்னுடைய வாழ்க்கையின் most precious என் செல்ல பாரதியும் கிடைக்க அவன் தானே காரணம்... ஆனால் ரதி, நீ சொல்றது எல்லாம் சரியில்லை... நீ நம்ம கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னது வேணுமுன்னா அன்னைக்கு ஹோட்டல்ல நடந்த கலாட்டாவால இருக்கலாம். மற்றபடி நான் அதுக்கு முன்பே உன் மனசுல வந்தாச்சே...”

  

அதெல்லாம் ஒண்ணுமில்லை... கல்யாணம் முடிவான அப்புறம் கூட எனக்கு கல்யாணம் பிடிக்கலைன்னு தான் பவி கிட்ட புலம்பிட்டு இருந்தேன்...”

  

தெரியும்... கேள்விபட்டேன்... ஆனால் அது உன் உதடுகள் பேசினது தானே? நான் சொல்றது உன் மனசைப் பத்தி...”

  

சும்மா சும்மா கதை விடாதீங்க! அப்படி எல்லாம் ஏதுமில்லை...”

  

என்ன எதுவும் இல்லை? உனக்கு மதுவை தான் தெரியும், நம்முடைய முதல் இரண்டு சந்திப்புகள் நல்ல விதமாவும் இல்லை... ஆனாலும் நான் உன் கிட்ட மதுவை பத்தி பேசினப்போ, நீ எனக்காக தானே பேசின? அப்போ மட்டுமில்லையே என்னுடைய பிஸ்னஸ் ஐடியா பத்தி சொன்னப்போவும் கூட என்னை எவ்வளவு உற்சாகப்படுத்தினேன்னு ஞாபகம் இருக்கா? அம்மா கிட்ட நீ பேசினப்போவும் கூட அப்படியே தான்...”

  

அடடா! ஒரு பேச்சுக்கு பேசினா உங்களை எனக்கு பிடிச்சதா அர்த்தமா?”

  

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.