“ஆஹா, எல்லோருக்காகவும் அப்படியே பேசுற ஆளு தானே நீ? இது கூட வேண்டாம் எப்போவும் சிடுசிடுன்னு இருக்கும் இந்த பாரதி மேடம் என்னை முதல் முதல் மீட் செய்தப்போ எப்படி ஒரு ஸ்மைலோட வந்து தரிசனம் கொடுத்த!!!”
“இதெல்லாம் ரொம்ப ஓவர் ஆனந்த்! உங்களை பார்க்குறதுக்கு முன்னாடியே எனக்கு உங்க மேல லவ்வாக்கும்...”
“இல்லை, உனக்கு அப்போ தெரியாது... ஆனால் நான் தான் உன்னுடைய ஜோடி என்பது முன்னாடியே முடிவான ஒரு விஷயம்... அதனால தான் எந்த ரீசன்க்காகவா இருந்தாலும் என்னை மீட் செய்யும் போது நீ அப்படி ஒரு ஸ்மைலோட இருந்த...”
“ஓ, இதெல்லாம் முன்னாடியே தெரிஞ்சு தான் நீங்க அப்படி மூஞ்சியை வச்சிருந்தீங்களா? நான் கூட உங்களை உம்மணாம்மூஞ்சின்னு நினைச்சேன்...”
“ஆமாம், அது தான் சொன்னீயே ரவுடி போல இருக்கேன்னு...”
பல நாட்களுக்கு பிறகு மனம் விட்டு சிரித்தாள் பாரதி.
“உண்மையை தானே சொல்ல முடியும் ஆனந்த்...”
“அதை தான் நானும் இப்போ சொல்றேனே, இதெல்லாம் நடந்தது நம்மை சேர்த்து வைக்க...”
“க்கும்...”
“நிஜம் ரதி. உன் கிட்ட சொன்னேனே நினைவிருக்கா, எப்போவும் நான் உன்னை ஜெயிக்க முடியாதுன்னு... நான் உண்மையில சொல்ல விரும்பினது என்ன தெரியுமா? எப்போவும் என்னை உன்னால மட்டும் தான் ஜெயிக்க முடியும் என்பது தான்... இது நம்முடைய இரண்டாம் சந்திப்பிலேயே எனக்கு தெளிவா தெரிஞ்ச விஷயம்... இன்னைக்கும் அப்படி தான்... எப்போவும் இந்த விவேக்கை, விவேக்கோட மனசை ஜெயிச்ச, ஜெயிக்குற திறமை இருக்க ஒரே ஆள் நீ தான்...”