(Reading time: 7 - 14 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

  

துவரை விளையாட்டாக பேசிக் கொண்டிருந்த விவேக், இதை பாரதியின் கைகளை பற்றியப்படி உணர்ச்சி பொங்க சொல்லவும், பாரதி மெய் சிலிர்த்து அமைதியாக இருந்தாள். அவன் சொல்வதும் சரி தானே, அவளே கூட எங்கே விவேக்கை விரும்ப தொடங்கி விடுவாளோ என்று பயப்பட தானே செய்தாள்...

  

இந்த இரண்டு மாசத்துல் நானும் என் மனசை சரியா புரிஞ்சுக்கிட்டேன் ஆனந்த்... அந்த பாலா நடந்துக் கிட்ட விதத்துக்கு அவ்வளவு ஈசியா நீ யாரையாவது கல்யாணம் செய்துக்கோ, என்னை பணத்துக்காக எல்லாம் நீ கல்யாணம் செய்துக்க வேண்டாம்னு என்னால சொல்ல முடிஞ்சது... ஆனால் உங்க விஷயத்துல, எனக்கு சின்னதா கூட சஞ்சலம் வரவே இல்லை... நீங்க என் கிட்ட அவ்வளவு கோபமா நடந்துக் கிட்டப்போ கூட, உங்களுக்கு என்ன பிரச்சனை, அதை எப்படி கண்டு பிடிக்குறது, எப்படி தீர்த்து வைக்குறதுன்னு தான் எனக்கு குழப்பமா இருந்ததே தவிர, வேறு மாதிரி தோணவே இல்லை... அதே போல லாவண்யாவை தப்பா நினைச்சு அவங்க ஒருவேளை உங்க வாழ்க்கையில் திரும்ப வந்திருக்காங்களோன்னு யோசிச்சு குழம்பினப்போ கூட உங்களை விட்டு பிரிஞ்சு போகனும்னு எனக்கு தோணவே இல்லை... அந்த அளவுக்கு உங்க மேல மட்டும் தான் எனக்கு நம்பிக்கையும், அஃபெக்ஷனும் இருக்கு...”

  

பாரதி பாலா விஷயம் தொடங்கி எதையும் மறைக்காமல், தடுமாறாமல் அவனிடம் ஈஸியாக பேசவும், விவேக்கின் முகத்தில் பெரிய புன்னகை உதயமானது! உலகையே வென்று விட்ட பெருமிதமும், மலர்ச்சியும் அவனிடம் தோன்றியது!

   

அது தான் ரதி கண்ணா காதல்... உனக்கு என் மேல இருப்பது தான் காதல், உணமையான அன்பு எல்லாமே...”

  

புரியுது ஆனந்த்... அதே போல தான் மாமா, அத்தை, உமா, மது, ஏன் பவி, அண்ணா, அம்மா எல்லோரையுமே இப்போ என்னால வேற விதமா பார்க்க முடியுது... புரிஞ்சுக்க முடியுது... உங்க ஃப்ரென்ட் லாவண்யா கூட ரொம்ப நல்ல மாதிரி...”

  

ம்ம்ம்... லாவி உன்னை புகழ்ந்து தள்ளிட்டா போ... புதன் கிழமை லஞ்ச்க்கு வீட்டுக்கு வர

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.