தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 24 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
கிருத்திகாவின் முகத்தில் இருந்து விஜய்க்கு என்ன புரிந்ததோ, “உன் கோபத்திலேயும் நியாயம் இருக்கு பிரின்சஸ்... தியாகுவுக்கு உன் மேல கண்ணு மண்ணு தெரியாத காதல்... ஆனால் நானாவது யோசிச்சிருந்திருக்கலாம்,” என்றான்!
கண்களில் மின்னிய கேள்வியுடன், “ஏன் அப்படி சொல்றீங்க?” என்றாள் கிருத்திகா!
“உங்க இரண்டு பேருக்கும் நடுவே பளிச்சுன்னு தெரியும் வேறுபாடுகள் தான் காரணம்! நான் தான் சொன்னேனே நீ சேல்ஸ் புலின்னு... சிக் ப்ராஜக்ட் ஒன்னை உன் கிட்ட கொடுத்தா கூட உன் கிட்ட இருக்க மைடாஸ் டச்’னால அது உன் கிட்ட வந்த உடனே ப்ராஃபிட் வர ப்ராஜக்ட்டா மாறிடும்... நீ மாத்திடுவ... இந்த சேல்ஸ், டார்கட் இதெல்லாம் உனக்கு மூச்சு மாதிரி முக்கியமானவை... தியாகுவை பொறுத்த வரை லாபம் முக்கியமில்லை... நூறு ரூபாய் லாபம் வந்தா தொன்னூறு ரூபாய் வரை மத்தவங்களுக்கு கொடுக்கிறவன் அவன்...”
விஜய் மேலும் ஏதோ சொல்ல தொடங்கவும், அவனின் செல்ஃபோன் ஓசை எழுப்பவும் சரியாக இருந்தது... ஃபோனை எடுத்து பேசி அந்த பக்கம் பேசியவரின் பேச்சை கவனித்தவன்,
“ஓகே, நான் வரேன்...” என்று முடித்தான்.
“ஒரு அவசர வேலை வந்திருச்சு பிரின்சஸ்... நான் கிளம்புறேன்... நீயும் வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு... தியாகுவை பத்தி யோசிச்சு ரொம்ப குழம்பாதே... எவ்ரிதிங் வில் பி ஆல் ரைட்!”
“சரி அண்ணா...” என்றாள் அவள் யோசனையுடன்.
🌼🌸❀✿🌷
கையிலிருந்த பெரிய பிட்ஸா டப்பாவை பிடித்தப்படி கஷ்டப் பட்டு கதவை திறந்தான் தியாகு.
கஸ்தூரி அன்று மாலை அரை நாள் லீவ் எடுப்பதாக முன்பே சொல்லி இருந்தாள்...
கீர்த்தி ஏதாவது சமைத்தாளோ என்னவோ என்ற எண்ணத்துடன் உள்ளே வந்தவன், நாசியை