(Reading time: 6 - 11 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

நான் எவ்வளவு வேணா சாப்பிடுவேன்... உனக்கு பத்துமா???”

  

வாயெல்லாம் பிரியாணியுடன் பேசியவனைப் பார்த்து புன்னகை புரிந்தாள் கிருத்திகா!

   

அதெல்லாம் பத்தும்... தேவை பட்டா நான் பிட்ஸா கூட சாப்பிடுவேன்... நீங்க உங்களுக்கு வேண்டிய அளவு எடுத்து ஃப்ரீயா சாப்பிடுங்க...”

  

தேங்க்ஸ் கீர்த்தி... இப்படி ஒரு டேஸ்டி பிரியாணி நான் சாப்பிட்டதே இல்லை...”

  

மனம் முழுக்க அன்புடன் சமைத்திருக்கிறேனே அப்புறம் அதெப்படி சுவைக்காமல் போகும்...!!!

  

மனதில் யோசித்தப்படி சின்ன புன்னகையுடன் அமைதியாக இருந்தாள் அவள்.

  

என்னால நம்பவே முடியலை கீர்த்தி... நம்ம வீட்டுல நீயும் நானும் பக்கத்து பக்கத்துல உட்கார்ந்து மாறி மாறி பரிமாறி சாப்பிடுறது... எல்லாமே கனவு போல இருக்கு...”

  

கனவெல்லாம் இல்லை சார், நிஜம் தான்...”

  

இல்லையே... கலைந்துப் போக போற நிஜம்...”

  

ஒரு பெருமூச்சுடன் எழுந்தவன், நின்று, அவள் பக்கம் திரும்பி, இடது கையால் அவளின் கன்னத்தில் மெல்ல தட்டி,

  

தேங்க்ஸ் கீர்த்தி... நீ மட்டும் எனக்கு குக் செஞ்சா அது சரியில்லை... நானும் உனக்கு ஒன் டே சர்ப்ரைஸ் கொடுக்கப் போறேன்,” என்றான் நெகிழ்ச்சியான குரலில்...

  

கிருத்திகா என்ன சொல்வதென்று புரியாமல் விழிக்க,

  

இதெல்லாம், எனக்கு எவ்வளவு பெரிய பொக்கிஷமான நினைவுகள்ன்னு உனக்கு தெரியாது... தேங்க் யூ சோ மச்...” என்றவன் வேக நடையுடன் அங்கிருந்து சென்றான்.

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.